பின்வரும் வசதி வாய்ப்புகள் விண்டோ8 இயக்கமுறைமையில் உள்ளன ஆனால் இந்த வசதி வாய்ப்புகள் விண்டோ7 இயக்கமுறைமையில் இல்லை.
2.1 ஒவ்வொருமுறை புதிய இயக்கமுறைமையை வெளியிடும்போதும் மைக்ரோ சாப்ட் நிறுவனமானது இயல்புநிலையில் கணினியின் தொடக்கஇயக்கமவிரைவாக இருக்கும் என உறுதி கூறிவந்தது ஆயினும் அவ்வுறுதியானது இதுவரையில் வெறும் ஏட்டளவில் மட்டும் கூறுவதாக இருந்திடுமேயன்றி நடைமுறையில் அவ்வாறு இருக்காது .ஆனால் இந்த விண்டோ 8 இயக்கமுறைமையில் இந்நிறுவனம் தான் உறுதியளித்தவாறு இயல்புநிலையில் கணினியின் தொடக்கஇயக்கம் விரைவாக இருக்குமாறு அமைத்துள்ளனர் .அதாவது விண்டோ7 48 நொடிகளில் தன்னுடைய தொடக்கஇயக்கத்தை கொண்டுள்ளதற்கு பதிலாக விண்டோ 8 ஆனது ஒன்பது நொடிகளில் தொடக்க இயக்கம் அமைந்துள்ளது இந்த செயல் எவ்வாறு சாத்தியமாகின்றது எனில் நாம் வழக்கமாக கணினியின் இயக்கத்தை நிறுத்தம் செய்திடும்போது அனைத்து இயக்கங்களும் நிறுத்தம் செய்யபடுகின்றது அதற்குபதிலாக இந்த விண்டோ 8 –ல் கெர்னல் எனும் உருவாக்க மையத்தின் செயல்மட்டும் அறிதுயிலில்(hibernate) வைக்கபட்டு ரேமில் சேமிக்க படுகின்றது .2.2 விண்டோ8 –ல் அனைத்து பயன்பாடுகளும் நினைவகத்திற்கு மேலேற்றுதல் செய்து அதன்பின்னர் தொடக்கஇயக்கம் ஆரம்பிப்பதற்கு பதிலாக நாம்விரும்பிய மின்னஞ்சல், செய்தியோடை போன்ற பயன்பாடுகளை மட்டும் முதலில் நினைவகத்திற்கு மேலேற்றுதல் செய்து அதன்பின்னர் தொடக்கஇயக்கம் ஆரம்பிக்குமாறு அமைத்து கொள்ளலாம்2.3 நாம் இணையத்தை பயன்படுத்திடும்போது ஏராளமான அளவில் கடவுச்சொற்களை நம்முடைய நினைவில் வைத்து கொண்டு செயல்படவேண்டும் விண்டோ8 –ல் நாம்விரும்பம் உருவப்படத்தினையே கடவுச்சொற்களாக பயன்படுத்தி உள்நுழைவு செய்திடமுடியும் அல்லது வழக்கமான எழுத்துகளை கடவுச்சொற்களாக பயன்படுத்தி உள்நுழைவு செய்திடமுடியும்2.4 விண்டோ 8 –ல் இயக்கநேர குறுக்குவழிகளை எந்தவொரு பயன்பாடுகளையும் செயல்படுத்திடுமாறு பயன்படுத்திகொள்ளமுடியும்2.5 இணைய பக்கங்களின் உள்நுழைவு செய்தல் ,பயன்பாடுகள் அவற்றின் கட்டமைவுகளை ஒத்தியங்கிடுமாறு செய்துதானியங்கியாக செயல்படுமாறு செய்யமுடியும்2.6 ஒரு சில பயன்பாடுகள் சிப்பியூ,ரேம் என்பன போன்ற முதன்மைநினைவகத்தை அதிகமாக பயன்படுத்துவதை தவிர்த்து அதனை எந்தெந்த பயன்பாடு எவ்வெப்போது எவ்வளவு முதன்மை நினைவகத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என விண்டோ 8 –ல் உள்ள செயல்மேலாளர்மூலமாக கட்டுபடுத்திடுகின்றது2.7 விண்டோ-7 இயக்கமுறைமைவரை பயனாளர் எத்தனை பயன்பாடுகளை பயன்படுத்த தொடங்கினாலும் பரவாயில்லை என இயக்கமுறைமையானது அனுமதிக்கின்றது ஆயினும் அதற்கேற்ப அவைகளின் செயல்வேகத்தை மட்டும் குறைத்துவிடுகின்றது ஆனால் விண்டோ 8 –ல் செயல்முடிந்த செயலில் இல்லாத பயன்பாடுகளை தானாகவே நினைவகத்திலிருந்து நீக்கம் செய்துவிடுகின்றது அதனால் செயலில் உள்ள பயன்பாடுகளின் செயல்வேகம் ஒரேசீராக பராமரிக்கபடுகின்றது தேவையெனில் விட்ட இடத்திலிருந்து குறிப்பிட்ட பயன்பாட்டினை செயல்படுத்திகொள்ளமுடியும்2.8.நாம் விரும்பும் படம் அல்லது இணையபக்கத்தினை இண்டெர்நெட் எக்ஸ்புளோர் 10 இன் மூலமாக நம்முடைய நன்பர்களுடன் Share எனும் பொத்தானை சொடுக்குவதன் மூலமாக பகிர்ந்து கொண்டு அதனை Twitter, Facebook ஆகிய சமூகவலைதளங்களின் மூலம் நிகழ்நிலை படுத்தி கொள்ளமுடியும்2.9 விண்டோ7 இல் கோப்புகளின் பண்பியல்புகளை மாறுதல் செய்திட குறிப்பிட்ட கோப்பினை தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் விரியும் குறுக்குவழிபட்டியில் properties என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்கியபிறகு விரியும்பண்பியல்பு பெட்டியில் தேவையான தாவியின் திரைக்கு சென்று தேவையான மாறுதல்கள் செய்திடவேண்டும் அதற்கு பதிலாக விண்டோ8 திரையில் பட்டிபோன்ற இடைமுகத்தின் வாயிலாக இதனை செயல்படுத்தி கொள்ளமுடியும்210. குறிப்பிட்ட கால இடைவெளியில் தானாகவே நாம் விரும்பும் இடத்தில் கோப்புகளை பிற்காப்பு செய்திடும்வசதி இந்த விண்டோ 8 –ல் உள்ளது2.11. விண்டோ -8 ன் இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரின் ஸ்மார்ட் ஸ்கிரீன் வடிகட்டுதல் எனும் வசதியின் வாயிலாக நாம் விரும்பிடும் கோப்புகளை பதிவிறக்கம் செய்திடும்போது தேவையற்ற, கணினிக்கு தீங்கு விளைவித்திடும் கோப்புகளை வடிகட்டி பதிவிறக்கம் செய்திட அனுமதிக்கின்றது2.12. ஏதேனும் கோப்புகளை நகலெடுத்திடும்போது விண்டோ-7ல் அந்த செயல் முடியும் வரை காத்திருந்து அதன்பின்னரே வேறு பணிகளைசெய்திடமுடியும் ஆனால் விண்டோ 8 –ல் அவ்வாறு கோப்பினை நகலெடுத்திடும் செயல் நடைபெற்று கொண்டிருக்கும்போது தற்காலிகமாக அதனை pause என்ற பொத்தானை அழுத்தி நிறுத்தம் செய்து நம்முடைய பணியை முடித்தபின் தொடர்ந்து விட்டஇடத்திலிருந்து நகலெடுத்திடும் பணியை செய்திடுமாறு பணிக்கலாம்2.13. Control Panel => General => என்றவாறு கட்டளைகளை செயல்படுத்துவதன் மூலம் தோன்றிடும் திரையில் Refresh your PC Fix என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குவதன் வாயிலாக கணினியில் ஏற்படும் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்வுசெய்து சரியாக கணினியின் இயக்கம் அமைந்திடுமாறு செய்கின்றது இதற்காக கணினியின் இயக்கத்தை நிறுத்தம் செய்யவோ அல்லது நாம் பயன்படுத்தி கொண்டிருக்கும் நம்முடைய பயன்பாட்டின் செயலை நிறுத்தம் செய்யவோ தேவையில்லை2.14. Microsoft’s Client Hyper-V virtualisation என்ற வசதியின் வாயிலாக தனியாக மெய்நிகர் கணினியை நிறுவுகை செய்திடாமல் மற்ற இயக்கமுறைமைகளை செயல்படுத்தி கொள்ளமுடியும்
Item Reviewed: பின்வரும் வசதி வாய்ப்புகள் விண்டோ8 இயக்கமுறைமையில் உள்ளன ஆனால் இந்த வசதி வாய்ப்புகள் விண்டோ7 இயக்கமுறைமையில் இல்லை.
Description:
Rating: 5
Reviewed By: Unknown
0 comments:
Post a Comment