Latest News

Friday, January 3, 2014

அ முதல் ஃ வரை கணினி ஒரு அறிமுகம்-புதியவர்களுக்கு

 

மிகஅற்புதமான கணினி உலகிற்குள் உங்களை வரவேற்பதில் பெரிதும் நான் மகிழ்ச்சி யடைகிறேன்.  தற்போது நாமெல்லோரும் இந்த புதிய தகவல் தொழில் நுட்ப சகாப்த நுழைவாயிலை கடந்த சென்று கொண்டிருக் கிறோம். அதன்பயனாக  நம்முடைய மிகப்பெரும் வெற்றி படைப்பான கணினி எனும் மிகஅற்புத கருவியுடன் பணிபுரிந்து வாழ்ந்து வருகிறோம்.
1.0
படம்-1
  கணினியானது பொதுவாக அதிக செலவு பிடிக்ககூடியம் புதுமையானதும் ஆன ஒரு பொருளாகத்தான் இதுவரை கருதப்பட்டு வந்தது.  ஆனால் இன்றைய நிலையில் இதன் தாக்கம் நம்முடைய ஒவ்வொருவருடைய அன்றாட வாழ்வில் நீக்கமற நிறைந்துள்ளது.  ஆயினும் துரித தொழில் நுட்ப வளர்ச்சி , ஆரய்ச்சி ஆகிய வற்றின் உதவியால்  மிகச்சிறந்த பல வாய்ப்புகளின் அதிகபட்ச நன்மைகள் குறைந்த செலவில்  தற்போது எங்கும் எவரும் எளிதில் அடையும் வகையில் கிடைக்கின்றன.
முதலில் இங்கு நான் உங்களுக்கு பல நிகழ்கால கணினியின் நன்மைகளை பற்றி அறிமுகபடுத்த விழைகிறேன்.  அதாவது தொடக்க காலத்தில் அறிவியல் ஆய்வுக்கூடத்திலும் பின்னர் ஆய்வு நிறுவனங்களிலும் இருந்த இந்த கணினியானது தற்போது படிப்படியாக  தனிநபர் முதல் தொழிலகங்கள்வரை  அடிப்படைத் தேவை யாகவே கணினி மாறிவிட்டதை காண்கிறோம்.  இன்று நம்முடைய எந்தவொரு செயலும் இந்த கணினியில்லாது நடைபெறாது என்று நிலைக்கு வந்துவிட்டது.
இவ்வாறான கணினியினால் நம்முடைய அன்றாட வாழ்வின் ஒருசில பயன்பாடுகள் பின்வருமாறு.
1. தொடர் வண்டி , வானூர்தி ஆகியவற்றில் பயனச்சீட்டுகளை ஒதுக்கீடு செய்வது.
2. மாணவர்களின் தேர்வு முடிவை அறிவிப்பதற்கான மதிப்பென் பட்டியலை தயார்செய்வது.
3. வானிலை அறிக்கைகளை தயார் செய்வது.
4. பொழுது போக்கிற்கான திரைப்படங்கள், அசைவூட்டு படங்கள், இசை தொகுப்புகள் போன்றவைகளை தயார்செய்வது.
5. மருத்துவமனைகளில் நோயாளிகளை கவணிப்பதற்கான திட்டங்களை நிரு வகிப்பது,
இவைகளின் தகவல்களை தொகுப்பது மட்டுமல்லாது மற்ற பயன்பாடுகளுக்கும் இதனை உபயோகித்து கொள்ளப்படுகின்றது.
இவ்வாறு பல பயனுள்ள செயல்களை நிகழ்த்தும் இந்த கணினி என்றால் என்ன ? என்ற கேள்வி கண்டிப்பாக இந்நிலையில் ஒவ்வொருவருக்கும் எழும்
கணினி என்பது மிகச்சிறந்த, துல்லியமான மின்னனு தகவல்களை,   உருவாக்கி பராமரிக்க உதவும் ஒரு இயந்திரமாகும் ,மேலும் இது இவ்வாறான தகவல்களை ஏற்று தேக்கி வைக்குமாறு வடிவமைக் கப்பட்டுள்ளது இவ்வாறு சேகரிக்க பட்ட தகவல்களை கொண்டு  நாம் இடும் கட்டளைக்கு ஏற்ப செயல்பட்டு அதன் விளைவுகளை வெளியிட உதவும் ஒரு கருவியாகும்.  இது ஒரு சாதாரன கணிப்பியை விட(calculator) பல்லாயிரம் மடங்கு வேகமாக செயல்படக்கூடியது ஆகும்.
இது தலைவலி பிடித்தசெயலான ,நகலெடுத்தல்(copy), நகர்த்துதல்(move), வெட்டுதல்(cut), ஒட்டுதல்(paste), போன்றவற்றுடன் தரவுகளை கூட்டுதல்,கழித்தல், பெருக்குதல், வகுத்தல், ஒப்பீடுசெய்தல் போன்ற கணக்கீடுகளையும் மிக எளிதில் நம்மைவிடமிக துல்லிய மாகவும் விரைவாகவும் செய்கின்றது.
இவ்வாறு செய்கின்ற செயல்களுக்காக சில கட்டளைகளை நாம் உள்ளீடு செய்ய வேண்டியுள்ளது  அவைகளை  கட்டளைத்தொடர் (programme) என அழைக்கின்றோம். சுருக்கமாக கூறவேண்டுமெனில் கணினி என்பது ஒரு மின்னனு சாதனமாகும் இது
1. பயனாளிகள் வழங்கும் தரவுகளை, கட்டளைகளை ஏற்று  செயல்படுகிறது.
2. தரவுகளை தேக்கிவைத்து கணக்கீடுகளை தருக்க செயல்களை செயல் படுத்துகிறது.
3. அதன்பின்னர் பயனாளர் குறிப்பிட்டவாறு வெளியீட்டை வழங்குகிறது.
4. மிகவிரைவாக நம்பகமான அளவில் தரவு,ஒலிஒலிபடம், ஒலி ஆகியவற்றை கம்பிவழியே கடத்துகிறது.
கணினியின் வரலாறு
இவ்வாறான கணினி பிறந்து வளர்ந்த வரலாறைஇப்போது கண்போம்.  ஆதியில் “கணினி(Computer)” என்பது கணிதர் ஒருவரின் பணிப்பின் கீழ் எண்ணுக்குரிய கணிப்புகளை செய்யும் ஒருவரை குறிப்பதாக அமைந்தது. அவர் அனேகமாக எண்சட்டம் போன்ற பல்வேறு பொறியியல் கணக்கீட்டு கருவியின் உதவியுடன் பணிபுரிந்தார்.
உதாரணமாக கி.மு 87 இல் உருவாக்கப்பட்டதாக கருதப்படும் அன்டிகைதிரா எனும் கிரகங்களின் அசைவுகளை கணிப்பதற்கு பயன்பட்ட கிரேக்க சாதனத்தை குறிப்பிடலாம் . கணிப்புகளை செய்யும் ஒருநபரே கணினி(Computer)” ஆகும் என்ற உருவகம்தான் மக்கள் அனைவரின் மனதிலும் 20ஆம் நூற்றாண்டு வரை இருந்து வந்தது .ஆனால்  19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கணினி என்பது கணிப்பதற்கு பயன்படும் ஒரு இயந்திரமாகும் என மக்களால் புரிந்துகொள்ளப்பட்டது
ஆயினும் 1.தானியங்கி கணக்கீடு, 2.கட்டளைத்தொடர்  ஆகிய இரு தொழில் நுட்பங்களின் அடிப்படையிலேயே இன்றைய கணினியின் வரலாறு தொடங்குகின்றது அபாகஸ் மணிச்சட்டம் முதல்வகைக்கும் அன்டிகைதிரா  இரண்டாம் வகைக்கும்  எடுத்துகாட்டுகளாகும்.
2
படம்-2
   படம்-2-ல் காணும் ஜாக்குவேர்டு லூம் என்பதுதான் 1801 ஆம் ஆண்டு முதன் முதலில் மனிதனால் உருவாக்கப்பட்ட  கட்டளைத்தொடர் சாதணமாகும் இது Museum of Science and Industry in Manchester,  England, இல் உள்ளது.இதில் துளையிடப் பட்ட அட்டையை பயன்படுத்தி ஒரு நெசவுஇயந்திரம் இயக்கப்பட்டது.
பின்னர் ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சி காரணமாக கணிதம், பொறியியல் துறைகள் பெரும் வளர்ச்சி கண்டன. அதன்பயனாக 17ம் நூற்றாண்றின் ஆரம்பப் பகுதியில் மணிக்கூடுகளுக்காக அபிவிருத்தி செய்யப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல பொறியியல் கணிப்பு சாதனங்கள்  வரத் தொடங்கின,
3
படம்-3
இதன் காரணமாக எண்ம கணினி மூலமான தொழில் நுட்பங்கள் பல 19ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ம் நூற்றாண் டின்  ஆரம்பத்திலும் அபிவிருத்தி செய்யப்பட்டன.  டிஃபரன்ஸ் எஞ்சின் என்பதை 1823 இலும் அனாலிட்டிகல் எஞ்சின் எனும் முதன்முதல் முழுமையான கட்டளைத்தொடர் கணினியை 1837இலும் சார்ல்ஸ் பாபேஜ் என்பவர்  வடிவமைத்தார்.
4
படம்-4
  1890 ஆம் ஆண்டின் ஐக்கிய அமெரிக்க  நாட்டினுடைய மக்கள்தொகை கணக்கிடுவதற்காக ஹெர்மன்ஹோல்டிரித் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்ட துளையிடப்பட்ட அட்டையும் கணக்கீட்டு அட்டவனைஇயந்திரமும் பெரிதும் பயன்பட்டது.தொடர்ந்து இவ்வாறான கணக் கீட்டிற்காக தற்போது IBM என சுருக்கமாக அழைக்கப்படும் International Business Machine Corporation என்ற நிறுவனத்தை இவர் 1911 இல் தொடங்கினார்.இவ்வாறு இதுவரையில் உருவாக்கபட்ட வைகளை முதல் தலை முறை கணினி என அழைக்கப்படுகின்றது.
5
படம்-5
  பெனிசில்வேனியா பல்கலைகழகத்தில் பணிபுரிந்த ஜான்மேக்லீ ,எக்கெர்ட் ஜெ.பிரஸ்பெர் ஆகியஇருவரும் கூட்டாக சேர்ந்து  இனியாக் ENIAC என சுருக்கமாக அழைக்கப்படும் Electronic Numerical Integrator and Calculator என்ற சுமார் 30 டன் எடையுள்ள 18000 வெற்றிடகுழாய்களை(vacum tube) பயன்படுத்தி கணினியொன்றை 1946 இல் இரண்டாம் உலகப்போருக்காக போர்முடிந்த பின்னர் உருவாக்கினர்.
6
படம்-6
   அதன்பின்னர் இந்த இனியாக்கின் குறைகளை தெரிந்து கொண்டு, அதைவிட நெகிழ்வுதன்மை கொண்டதும், நல்ல வடிவமைப்பை  கட்டளைத்தொடர் தேக்க கட்டமைப்பு என அறியப்படும் இன்றைய கணினியின் முன்னோடியான EDSAC என சுருக்கமாக அழைக்கப் படுகின்ற  Electronic Delayed Storage Automatic Computer என்ற கட்டளைத்தொடர் கணினியை 1952 இல் ஜான்வான் நியூமேன் என்பவரால்  உருவாக்கப் பட்டது  இவ்வாறு வெற்றிடகுழாயால் உருவாக்கப் பட்டவை இரண்டாம் தலைமுறை  கணினி என அழைக்கின்றனர்
ஆனால்1964 ஆம் ஆண்டு  மின்மபொருக்கி (transistor) கண்டுபிடிக்கப்பட்டதன் காரணமாக 1960 களில் உருவில் பெரியதாக இருந்த வெற்றிடகுழாய் கணினியானது செலவு குறைந்த, சிறிய,ஆனால் வேகமான மின்மபொருக்கி (transistor) கணினிகளால் மாற்றீடு செய்யப் படலாயின.இந்த வகை மூன்றாம்தலைமுறை கணினியாகும்.
ஒருங்கிணைந்த மின்சுற்று(integrated circuit) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைந்த அரைக்கடத்தியின்(semiconductor)[i]அறிமுகத்தால்1970 களில்  கணினி உற்பத்திச் செலவு வெகுவாகக் குறைந்து கணினியின் உருவமும் மிகச் சிறியதானதால் தற்போதைய தனியாள் கணினிகளின் (PC)முன்தோன்றல்கள் சந்தையில் சாதாரண மக்களும் வாங்கும் அளவிற்கு கிடைக்கத்தொடங்கின.
7
படம்-7
  இதற்கடுத்த நிலையில் நுன் செயலியின்(microprocessor) வரவால் மிகச்சிறிய ஆனால் மிகவேகமாக செயல்படும் சிறியகணினி பாமரனும் வாங்கத்தூண்டும் விலையில் உருவாக்கப்பட்டது இந்தவகைகணினிகள் நான்காம்தலைமுறை கணினி என அறியப்படுகின்றது.
சம்பளப்பட்டியல் தயாரிப்பதிலிருந்து தொழிலகஇயந்திரங்களை கட்டுப்படுத்தல் வரையான பல்வேறு பணிகளுக்கும் ஒரேவிதமான கணினி வடிவமைப்புகளே பயன்படுத்தப் படுகின்றன. ஆயினும் முந்தைய வடிவமைப்புகளை விட தற்போதைய கணினிகள் வேகத்திலும் தகவல்களை செயற்படுத்தலிலும், கொள்ளளவிலும் பெரும் வளர்ச்சியை கண்டுள்ளன. இவற்றின் இந்த திறனானது அடுக்குறிபோக்கில்  அதிகரித்து வருகின்றது. அதாவது ஒவ்வொரு இரண்டாண்டிலும் கணினியின் திறன் இரண்டின் மடங்காக உயர்ந்து வருகின்றது இதனை மூர் விதி என்று குறிப்பிடுவர்.
கணினியின் வகைகள்
தொன்மையான கணினிகள் பெரிய கட்டிடம் அளவிற்கு இருந்தன. தற்போதும் விசேட அறிவியல் கணிப்புகளுக்கு பயன்படும் மீக்கணினிகள்  என அழைக்கப்படும் சிறியவகையிலிருந்து நிறுவனங்களின் பரிமாற்ற செயற்பாடு களுக்கு பயன்படும் முதன்மை சட்டக கணினி(Main Frame Computer) என அழைக்கப்படும் மீப்பெரிய வகை வரை தற்போது பயன்பாட்டில் உள்ளன. . ஆயினும் மக்களுக்கு அதிகம் பரிட்சய மானவையாக அமைவன சிறியளவானதும் ஒருத்தரின் பயன் பாட்டுக்குரியதுமான தனியாள் கணினியும்  மடிக்கணினியும் ஆகும். ஆனால் தற்காலத்தில் அதிகளவில் பயன்பாட்டில் உள்ள கணினிகளாக அமைபவை உட்பொதி கணினிகளாகும்(Embedded Computer). இந்த உட்பொதிகணினியென்பது இன்னொரு சாதனத்தை கட்டுப் படுத்து வதற்குரிய சிறிய கணினியாகும். இவை போர்விமானங்களில் இருந்து எண்ம படப்பிடிப்பு கருவிகள் வரை பயன்படுத்தப் படுகின்றன  செயலின் அடிப்படையில் கணினியை இரு வகையாக பிரிக்கலாம் அவை
8
படம்-8
1.ஒத்திசைக்கணினி(analog computer): தொடர்ந்து மாறிக்கொண்டே யிருக்கும் வெப்பநிலை,திரவம், மின்சாரம்  போன்றவற்றை கணக்கிட பயன்படுகின்றது. முதல் படத்தில் பொறியியல் அனலாக் கம்யூட்டர்  இரண்டாவது படத்தில் மின்னணு ஒத்திசைக்கணினி(analog computer)ஆகும்
2.எண்ம கணினி(digital computer): தற்போது நடைமுறையில் நம்மால் பயன்படுத்தி கொண்டிருப்பவை
ஆயினும் பொதுவாக உருவஅமைப்பின் அடிப்படையில் கணினியை பின்வருமாறு வகைபடுத்தப்படுகின்றன.
1.மீப்பெருங்கணினி(super computer): இந்தியாவின் சிடாக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட –பாரம்-10000 இந்தவகையைசேர்ந்தது. வின்வெளிஆய்வு நிறுவனங்களில் உபயோகப் படுத்தப் படுகின்றது
2.முதன்மைபொறியமைவுகணினி(mainframe computer): இரயில்வே வங்கி போன்ற நிறுவனங்களில் ஒரே சமயத்தில் பல்லாயிரகணக்கான நபர்பயன்படுத்திடும் வகையில் இதனை உபயோகப்படுத்தபடுகின்றது
3சிறுகணினி(mini computer) : சிறுநிறுவனங்களில் ஒரேசமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள்  பயன்படுத்திடும் வகையில் இதனை உபயோகப்படுத்தபடுகின்றது
4.மிகச்சிறு கணினி(micro computer): தனிநபர் பயன்பாட்டிற்கான ஒருசமயத்தில் ஒருவர் மட்டுமே பயன்படுத்திடமுடியும்
5.புத்தகக்கணினி :
6.மடிக்கணினி:
7.கைக்கணினி :
கணினியின் பாகங்கள்
 9
படம்-9
 பருப்பொருளான ஓர்உடலும் அதனை இயக்குகின்ற உயிரும் சேர்ந்த ஒரு உருவை மனிதன் என நாம் அழைக் கின்றோம் அவ்வாறே  பருப்பொரு ளான 1வன்பொருளும்(hardware)  அதனை இயக்கபயன்படும் உயிர் போன்ற 2. மென்பொருளும் (software) சேர்ந்த ஒட்டுமொத்த உருவ மைப்பையே  கணினியென அழைக்கப்படுகின்றது இதனுடைய 1வன்பொருளd(hardware பின்வருமாறு
1.கணினித்திரை(monitor):  ஆரம்ப காலங்களில் கணினி யானது இந்த கணினித்திரை (monitor) இல்லாத தாகவே இருந்துவந்தது.ஆனால் இன்றோ கணினித்திரை(monitor) இல்லாத கணினியே இல்லை யென்றே கூறலாம் .நாம் உள்ளீடு செய்கின்ற எந்தவொரு செய்தியையும் கண்களால் காண்பதற்கேற்ப பிரிதிபலிக்க பயன்படுவதே கணினித்திரை(monitor)ஆகும். ஆரம்பத்தில் சிஆர்டி கணினித்திரை(monitor) அதன்பின்னர் எல்சிடிகணினித்திரை(monitor)  தற்போது ட்டிஎஃப்ட்டி கணினித்திரை(monitor) என மாறிக்கொண்டே வந்துள்ளது.
10
படம்-10
2. தாய்ப்பலகை(motherboard): செயலிகள், அட்டைகள், நேரணுகு நினைவகம் போன்றவை களை பொருத்தி இவைகளை ஒன்றுக்கொன்று இணைத்து முழுமையாக்க இது பயன்படுகின்றது
3. மத்திய செயலகம்(CPU): இங்குதான் அனைத்து கணக்கீடுகளை செயற்படுத்துவது தகவல்களை கடத்துவது போன்றசெயல்கள் நடைபெறுகின்றன
4. நேரணுகு நினைவகம் (RAM): கணினி செயற்படுவதற்குதேவையான தகவல்களை அவ்வப்போது தேடிபிடித்து கொண்டுவந்து செயல்படுத்துவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்ப்பதற்காக அடிக்கடி தேவைப்படும் தகவல்களை தயார்நிலையில் வைத்துகொண்டு அவ்வப்போது பயன்படுத்தி கொள்ளும் தற்காலிக நினைவகமாகும். இதுதான் ஒருகணினியின் முதன்மை நினைவக மாகவும். செயல்படுகின்றது ஆரம்பத்தில் 64எம்பியில் தொடங்கி 128எம்பி, 256எம்பி ,512எம்பி ,1ஜிபி ,2ஜிபி, 3ஜிபி, 4ஜிபி என இதன் திறன் வளர்ந்துகொண்டே வந்துள்ளது மின்சாரம் இருக்கும்வரை மட்டுமே இந்நினைவகத்தில் தகவல்கள் இருக்கும் .மின்சாரம் இல்லையனில்  இந்நினைவகத்தில் தகவல்கள் அழிந்துபோகும்.
5.விரிவாக்க அட்டை  கணினியில் ஒருசில கூடுதல் பணிகளுக்கு தேவைப்படும் கருவிகளை இணைத்து பயன்படுத்துவதற்காக துனையாக இருக்கின்றது
6.மின்விநியோகஅமைப்பு கணினியின் உள்ளுறுப்புகள் இயங்குவதற்கு தேவையான மின்சாரத்தை இது வழங்குகின்றது
7. குறுவட்டு பொறுத்துவாயில்   எழுதுவதற்கும் படிப்பதற்கும் ஆன குறுவட்டு களை கணினிக்குள் பொருத்துவதற்கு பயன்படுகின்றது.
8. வன்தட்டு(HD) கணினியில் தகவல்களை நிரந்தரமாக தேக்கிவைத்திட பயன்படுகின்றது.இதனை கணினியின் இரண்டாம்நிலை நிணைவகமாக கருதுவார்கள் இதன் நிணைவக கொள்ளளவு 80ஜிபி முதல் 320ஜிபி வரையில் இருக்கின்றது C: இயக்ககம் D: இயக்ககம்  E: இயக்ககம்(Directory) என நாம் பயன்படுத்தி கொள்வதற்காக இதன் நிணைவகத்தை பாகப்பிரிவினைசெய்வார்கள் கொள்ளளவு 80ஜிபி முதல் 320ஜிபி வரையுள்ள வெளிப்புற வன்தட்டையும் கணினியுடன் இணைத்து பயன்படுத்திகொள்ள முடியும்
11
படம்-11
9.விசைப்பலகை இது ஒரு தட்டச்சு இயந்திரத்தினை ஒத்த வாறான விசைகளை கொண்டது இதில் கூடுதலாக முதல்வரிசையில்  ஒருசில கட்டளைகளை உடனடியாக செயல்படுத்துவதற்கான செயலி விசைகள், இதனுடன் தற்போதைய செயலிலிருந்து வெளியேறுவதற்கு Esc எனும் விசை, பெரியஎழுத்தாக்கு வதற்கு Caps Lock எனும் விசை, எண்களின் விசைகளை கட்டுபடுத்துவதற்கு Num Lock எனும் விசை ஆவணங்களின் பக்கங்களை நகர்த்துவதற்கு Scrol Lock எனும் விசை செயலை தற்காலிகமாக நிறுத்திட Pause எனும் விசை திரைகாட்சியினை படமாக ஆக்கிட Print Screen  எனும் விசை  என்பன போன்ற  சிறப்புவிசைகளும், இரண்டாவது வரிசையில்  0லிருந்து 9 வரையுள்ள எண்களின் விசைகள் தட்டச்சுசெய்த எழுத்தை அழிக்க Backspace எனும்விசை  வலதுபுறமையத்தில் ஆவணங்களில் இடம்சுட்டியை நகர்த்துவதற்கு பயன்படும் Page up எனும் விசை, Page down எனும் விசை, இவைகளுக்கான அம்புக்குறிகள்  Home End எனும் விசை,  Insert எனும் விசை, del எனும் விசை, Enter என்பன போன்ற  சிறப்புவிசைகளும், வலதுபுறத்தில் கனிப்பியை போன்ற 0லிருந்து 9 வரையுள்ள எண்களின் விசைகள்  கடைசி வரிசையில் ஒருசில சிறப்பு செயல்களுக்காக பயன்படும் Shift எனும் விசை, Ctrl எனும் விசை, Alt எனும் விசை என்பன போன்ற  சிறப்புவிசைகளும் சேர்ந்து ஆகமொத்தம் 101அல்லது அதற்கு மேற்பட்ட விசைகளை கொண்டதாகும்.
10. இடம்சுட்டி  இது ஒரு விசைப்பலகையின் உதவியில்லாமல் கணினியை இயக்க பயன்படும் கருவியாகும்.
11.நிகழ்வுநேரங்காட்டி (Real Time clock)ஒருகணினியானது இயங்கிகொண்டிருந்தாலும் இயங்காது இருந்தாலும்  இதில்பொருத்தப்பட்ட மின்கலத்தின் உதவியால் தொடர்ந்து இயங்கி கொண்டே இருந்து நாம் கோரும்போது அப்போதைய நேரத்தையும் நாளையும் காட்டிட உதவுகின்றது
12 .அச்சுபொறி இது கணினியின் வெளியீடுகளை தாளில் நாம் படிப்பதற்கு வசதியாக அச்சிட்டு பெறுதற்கு பயன்படும் கருவியாகும் .இவ்வாறான அச்சுப்பொறிகள் பின்வருமாறு வகைபடுத்தப்படுகின்றன
1.புள்ளியிலான அச்சுப்பொறி(dotmatics printer) இது செலவு குறைந்தது 9 பின் 24 பின் ஆகியவகைளில் கிடைக்கின்றது இதன்திறன் dpi (Dot per Inch)இல் அறியபடுகிறது
2.மைஊற்றும் அச்சுப்பொறி(Inkjet printer)  வண்ணப்படங்களை அச்சிடுவதற்கு ஆனால் செலவதிகமானது
3. வரிஅச்சுப்பொறி(line printer)  வர்த்தக நிறுவணங்களில் பயன்படுத்தப்படுகிறது இதன்திறன் Lpm(Line per minute) இல் அறியபடுகிறது
4. ஒளிஅச்சுப்பொறி(laser printer) வர்த்தக நிறுவணங்களில் பயன்படுத்தப் படுகிறது  இதன்திறன் PPm (Page per Minute இல் அறியபடுகிறது
5வரைவி.( plotter) பொறியியல் வரைபடங்களை வரைய பயன்படுகிறது
பொதுவாக முதலிரண்டும் இயங்கிடும்போது அதிக இரைச்சல் ஏற்படும்.
கம்பிகள்(Cables) இணைப்பான்கள்(Conectors) பொறுத்திகள்(Jockets)  கணினியின் உறுப்புகளையும் கருவிகளையும்  ஒன்றுடன் மற்றொன்றை இணைத்து முழுமையான கணினியாக உருவாக்குவதற்கு கம்பிகள்(Cables) இணைப்பான்கள் (Conectors) பொறுத்திகள்(Jockets) ஆகியவை பயன்படுகின்றன.
அதுமட்டுமல்லாது கணினியின் உறுப்புகளை 1. விசைப்பலகை, இடம்சுட்டி,  வருடி, நுன்பேசி ஆகியவற்றை கணினியின் உள்ளீட்டு கருவிகள் என்றும்
2. மத்திய செயலகம்(CPU) ரேண்டம் நேரணுகு நினைவகம் (RAM) போன்றவைகளை நுன்ம செயலிகள் என்றும்
3. கணினித்திரை(monitor),அச்சுப்பொறி ,ஒலிபேசி போன்றவைகளை கணினியின் வெளியீட்டு கருவிகள் என்றும் வகைப்படுத்தப் படுகின்றன
12
படம்-12
 கணினிப் புறப்பெட்டி எனும் இதனை அமைப்பு அலகு(system unit) என அழைக்கப் படுகின்றது. இதில்தான் கணினியின் அனைத்து உள்ளுறுப்புகளும் கட்டமைக்கப் பட்டுள்ளன.
13
படம்-13
கணினிப் புறப்பெட்டியின் முன்பக்கஅமைப்பு
1.கணினியின் இயக்கத்தை தொடங்கவும் நிறுத்தவும் பயன்படும் நிகழ்/அகல் நிலைமாற்றி.(on/off switch)
2. கணினியின் இயக்கம் திடீரென தொங்கலாக நின்றுவிடும்போது சரிசெய்து மீண்டும் கணினியின் இயக்கத்தை தொடங்க பயன்படும் மறுஅமைவு நிலைமாற்றி(reset switch).
3.கணினி இயங்குகின்றதா மின்சாரம் கணினிக்குள் வருகின்றதா எனத்தெரிந்து கொள்வதற்கு பயன்படும் செயல்காட்டிவிளக்கு(indicator bulb)
4.குறுவட்டு நெகிழ்வட்டுகளை கணினிக்குள் நுழைத்து பொருத்துவதற்கு பயன்படும் குறுவட்டு நெகிழ்வட்டுநுழைவுவாயில் (cd/dvd drive)
14
படம்-14
கணினிப் புறப்பெட்டியின் பின்பக்கஅமைப்பு
1.கணினிக்குத்தேவையான மின்சாரத்தை வழங்கும் மின்கம்பிகளை இணைப்பதற்கு உதவும் மின்சாரம் உள்ளீடு / வெளியீடு பொறுத்துவாயில்கள்.
2.இடம்சுட்டி/ மோடம் ஆகியவற்றை இணைக்க பயன்படும் வாயில்களான இணைவாயில்
3.கணினியின் திரையை இணைக்க பயன்படும் வாயில்களான ஒளிப்படம் /கணினித்திரை வாயில்
4அச்சுப்பொறியை இணைக்க பயன்படும் வாயில்களான இணையான வாயில்
5. விசைப்பலைகையை இணைக்க பயன்படும் வாயில்களான விசைப்பலகைவாயில்
6.பென்ட்ரைவை இணைக்கபயன்படும் வாயில்களான யூஎஸ்பி போர்ட் இது தற்போது வெளியிடப்படும் கணினிகளில் முன்புறம் அமைக்கப்பட்டு வருகின்றது
பயாஸ்(BIOS)          
15
படம்-15

அடிப்படை உள்ளீட்டு வெளியீட்டு அமைப்பு Basic Input Output System என்பதன் குறும்பெயரே பயாஸ்ஆகும். கணினிக்கு மின்சாரத்தை அளித்து இதனை இயக்கத் தொடங்கும்போது கணினியின் உள்ளுறுப்புகள் இதனுடன் இணைக்கப் பட்டுள்ள கருவிகள்  அனைத்தும் நல்லநிலையில் உள்ளதா அவைகளுடனான இணைப்பு சரியாக இருக்கின்றதா என சரிபார்த்து அனைத்தும் சரியாக இருந்தால் மட்டும் தொடர்ந்து கணினியின் இயக்கும் பணியை இயக்க முறைமை (Operating System )யிடம் ஒப்படைக்கும் இவ்வாறான செயலை இதில் முன் கூட்டியே உட்பொதியபட்ட கட்டளைத் தொடரின் அடிப்படையில் செயற்படுத்துகின்றது இது கணினியின் முதன்மை(படிக்கமட்டுமான (Read only memory)) நினைவகமாகும் இந்த கட்டளைத் தொடர் உட்பொதியப்பட்ட செயலியை பயாஸ்சிப் என அழைப்பார்கள் கணினி இயங்க தொடங்கும்போது இதன் உள்ளுறுப்புகள் நல்லநிலையில் உள்ளதா அவைகளுடனான இணைப்பு சரியாக இருக்கின்றதா என சரிபார்த்திடும் பணியைPower On Self Test  சுருக்கமாக POSTஎன அழைப்பார்கள்
கணினியை வாங்குமுன் கவனிக்கவேண்டிய செய்திகள்
கணினியை இரண்டுவகையில் பெறமுடியும் .1.நிறுவனத்தாரால் உருவாக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளவை .இவை விலை அதிகமானவையாகும் இவைகளை நிறுவன கணினி (branded computer) என அழைப்பர் 2.கணினியின் உள்ளுறுப்புகள் ,கருவிகள் ஆகியவற்றை தனித்தனியே கடைகளில் வாங்கிவந்து அவற்றை ஒருங்கிணைப்பு செய்துகொள்வது  இந்தவகை விலைக்குறைவானதுஆகும் இதனை தொகுப்பு கணினி (Assembled computer) என அழைப்பர் . ஒரு கணினியை வாங்குமுன் நம்முடைய தேவைகள் நாம் எதிர்பார்த்திடும் பயன்கள் நம்முடைய கையிலிருக்கும் ரொக்கத்தொகை விற்பனைக்கு பிந்தையசேவை  வழங்கப்படும் உத்திரவாதம்  மேம்படுத்திகொள்ளும் வசதி ஆகிய காரணிகளை  கருத்தில் கொள்ளவேண்டும்.
மென்பொருள்  கணினியை இயக்கவும் குறிப்பிட்ட செயல்களை செயற்படுத்திடவும் தரவுகளை வைத்து கணக்கீடு செய்யவும் பயன்படும் கட்டளைகளின் தொகுப்பே கணினியின் மென்பொருளாகும்.  இந்த கட்டளைகளாலான மென்பொருளை கணினியில் பல்வேறு செயல்களை நாம்விரும்பியவாறு செயற்படுத்துகின்றது. இந்த கட்டளைத் தொடர்கள் BASIC, FORTRAN, PASCAL, C++, JAVA, என்பனபோன்ற கட்டளைத்தொடர் மொழிகளில் எழுதப்படுகின்றது  இவை நம்மால் படித்துணரக்கூடிய ஆங்கில எழுத்துகளில் அமைந்திருக்கும் ஆனால் கணினிக்கு 0,1 ஆகிய இரண்டு எண்கள் மட்டுமே தெரியும்  அதனால் இந்த உயர்நிலை கட்டளைத்தொடர் மொழிகளில் எழுதப்படுகின்ற இந்த கட்டளை தொகுப்புகளை கணினிக்கு புரியக்கூடியவகையான இயந்திரமொழியாக மொழிமாற்றம் செய்திட சிப்பு மொழிபெயர்ப்பி(assembler),தொகுப்பி(compiler) ஆகிய கருவிகளை பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது இவைகளைபற்றி மெத்தபடித்தவர்கள் பார்த்துகொள்வார்கள் அதனால் அவற்றை பற்றி கவலைப்படவேண்டாம்..
இந்தமென்பொருளை  1.அமைப்பு மென்பொருள் 2.பயன்பாட்டு மென்பொருள் என இரு வகையாக பிரிக்கின்றனர்  விண்டோ, லினக்ஸ் போன்ற இயக்க முறைமைகள்(OS) முதல் வகையை சார்ந்தது. அலுவலக பயன்பாடான Ms Office, open Office ஆகியவற்றின் வேர்டு எக்செல் பவர்பாய்ன்ட் போன்றவை இரண்டாம் வகையை சார்ந்தது.
இந்த இயக்கமுறைமையானது(OS) ஒரு கணினியின் கட்டு பாட்டாளராக செயல்படுகின்றது .அதாவது வன்பொருளிற்கும் மென்பொருளிற்கும் இடையே  ஒருங்கிணைப்பாளராக இருந்து கொண்டு அந்தந்த செயல்களுக்கு அவ்வப்போது தேவைப்படும் நிணைவகத்தை ஒதுக்கீடுசெய்து ,உள்ளீட்டு வெளியீட்டு  சாதணங்களை கட்டுபடுத்தி  கணினியை நாம் விரும்பியவாறு நன்கு இயங்கும்படி செய்கின்றது.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: அ முதல் ஃ வரை கணினி ஒரு அறிமுகம்-புதியவர்களுக்கு Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top