மீட்டாக்க வட்டு எத்தனைமுறை பயன்படுத்திட வேண்டுமென ஏதேனும் கட்டுபாடு உள்ளதாவென சேந்தேகபடுபவர்கள் அவ்வாறான கட்டுபாடுஎதுவும் இல்லாமல் எத்தனைமுறைவேண்டுமானாலும் இந்த செயலிற்காக பயன்படுத்திகொள்ளலாம் அதனால் வட்டிற்கு சேதமோ தரவுகளின் இழப்போ ஆகிய எதுவும் ஏற்படாது என்ற செய்தியை மனதில் கொள்க. கணினியானது தொடங்காமல் சண்டித்தனம் செய்தால் அல்லது இயங்கிகொண்டிருக்கும்போது பாதியில் தொங்கலாக நின்றுபோனால் அல்லது கணினியின் திரை கருப்பாக தோன்றினால் கணினியின் பதிவேட்டில் பிழை ஏற்பட்டுவிட்டது என தெளிவுபெற்று மீட்டாக்க வட்டின்மூலம் கணினியின் நினைவகத்தை மறுகட்டமைவு செய்வார்கள் அதனால் கணினியின் பதிவேட்டின் பிழை சரிசெய்யபட்டுவிடும் வைரஸ் மால்வேர் போன்றவைகளினால் கணினிக்கு ஏற்படும் பாதிப்பின்போதும் இந்த மீட்டாக்க வட்டினை பயன்படுத்தி சரிசெய்துகொள்ளலாம்
Friday, January 3, 2014
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment