Latest News

Wednesday, April 2, 2014

தொலைவில் உள்ள கணினியை அருகில் இல்லாமலே இயக்கலாம்


இந்த பதிவு நிறைய தளங்களில் வந்து உள்ளது இருந்தாலும் நமது தளத்தின்

வாசகர்களுக்காக இந்த பதிவு .................(நிறைய தளங்களில் இந்த பதிவு

இருந்தாலும் ஒரே மாதிரியாக தான் (ஈ அடிச்சான் கோப்பி போல  ) இருக்கு

ஆகையால் தான் என்னோட எழுத்து நடையில் (தங்கிலிஷ்யில் )எழுதி

கொண்டு இருக்கிறேன் (நீங்க தான் சொல்லணும் இந்த பதிவுக்கு  நீங்க

தான் மார்க் போடணும்   மறக்காமல் கருத்து பெட்டியில் சொல்லுங்க )

முதலில் பதிவுக்கு போகும் முன் இந்த மென்பொருளின் பலன்களை முதலில்

தெரிந்து கொள்ளவோம் வாங்க உதாரணமாக உங்க வீட்டில் ஒரு கணினி

இருக்கு நீங்க வெளிநாட்டில் இருக்கிங்க ஒரு வேலை கம்ப்யூட்டர் வேலை

செய்யவில்லை என்றால் என்ன பண்ணுவிங்க சின்ன சின்ன பிரச்சனை

இருந்தால் கூட நல்ல தெரிந்தவர்களிடம் சொல்லி பார்க்க சொல்லுவோம்

அல்லவா ஆனால் இந்த TEAM VIEWER மென்பொருள் உங்கள் கணினி ,மற்றும்

உங்கள் வீட்டில் உள்ள கணினியில் இன்ஸ்டால் செய்து இருந்தால் நீங்களே

இயக்கலாம் உங்கள் வீட்டில் உள்ள  கணினியை நீங்கள் எங்கு இருந்தாலும்

உதரணத்துக்கு (இந்தியாவில் உங்கள் வீட்டில் உள்ள கணினியை  நீங்கள்

சவுதியில் இருந்தாலும் இயக்கலாம் ) இதனால் உங்கள் வீட்டில் உள்ள

கணினியை ஈசியாக இயக்கி பிரச்சனைகளை தீர்க்க  முடியும்  இதற்கு


இணைய இணைப்பு (INTERNET CONECTION )அவசியம் இருக்க வேண்டும் 

குறிப்பு :TEAM VIEWER மென்பொருள் இரண்டு கணினியிலும் தரவிறக்கம் 

செய்து இன்ஸ்டால் செய்தால்  மட்டுமே அதை இயக்கம் செய்ய முடியும் 

இன்ஸ்டால் செய்யும் முன் NON-COMERCIAL USE என்பதை தேர்வு செய்து 

விட்டு இன்ஸ்டால் செய்து கொள்ளவும் 

இதில் அடுத்தவர்களின் கணினியை இயக்குவது மட்டும் இல்ல FILE TRASFER 

ஈசியாக செய்து கொள்ளலாம் 

இந்த மென்பொருளில் முன்பின் தெரியாத நபர்களை சேர்க்காமல் இருப்பது

நல்லது  இந்த மென்பொருள் பாதுகாப்பு பற்றி கவலை பட தேவையில்லை 

உதாரணமாக உங்கள் கணினியை உங்கள் நண்பரிடம் இயக்க சொன்னாலும் 

அவர் நமது கணினியில் என்ன செய்து கொண்டு இருக்கிறார் 

என்று நாமும் பார்த்து கொள்ளலாம் 

முதலில் உங்கள் கணியில் மற்றும் உங்கள் வீட்டில் உள்ள கணினியில்

(அல்லது உங்கள் நண்பர் கணினியில் )TEAM VIEWER மென்பொருள்

தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும்

தரவிறக்கம் செய்ய இங்கே  http://www.teamviewer.com/en/download/windows.aspx

செல்லவும் உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும் கம்ப்யூட்டர்

மட்டும் இல்ல உங்களிடம் உள்ள மொபைலிலும் இயக்க முடியும்

(மொபைலில் இயக்குவது சற்று கடினம் கணினியில் உள்ளது போல மௌஸ்

இல்லாத காரணத்தால் )



பிறகு உங்கள் ஈமெயில் முகவரி முலம் TEAM VIEWER ஒரு கணக்கு

தொடங்கவும் .தொடங்கிய பின் கிழே உள்ள படத்தை போல உங்கள்

கணினியில் வரும்




TEAM VIEWER  ID மற்றும் PASSWORD குடுத்து இருப்பார்கள்  அதை அப்படியே

நீங்கள் இயக்க நினைக்கும் கணினியில் PARTNER ID யில் குடுத்து இயக்கி

கொள்ளலாம் உதாரணமாக உங்கள் வீட்டில் உள்ள கணினியில் முதலில்

இன்ஸ்டால் செய்து கொள்ளவும் பிறகு அவர்கள் குடுக்கும் TEAM VIEWER  ID

மற்றும் PASSWORDயை உங்கள் கணினியில் TEAM VIEWER  இன்ஸ்டால் செய்து

விட்டு குடுக்கவும் இனி உங்கள் விட்டில் உள்ள கணினியை இயக்க முடியும்


குறிப்பு :நீங்கள் மட்டும் அல்ல உங்கள் நண்பரை கூட உங்கள்  கணினியை 

இயக்க  சொல்லலாம் PASSWORD பற்றி கவலை பட வேண்டாம் அது ஒவ்வரு 

தடவையும் மாற்றி கொள்ளலாம் கிழே உள்ள படத்தை பார்க்கவும் ஆனால் 

உங்களுடை PERSONAL PASSWORD மற்றும் என்காரணம் கொண்டும் முன்பின் 

தெரியாத நபர்களிடம் சொல்ல வேண்டாம் கிழே உள்ள சிவப்பு வட்டத்தை 

பாருங்க அதை கிளிக் செய்து  வேற வேற கடவுச்சொல் மாற்றி கொள்ளலாம் 


PERSONAL PASSWORD மாற்ற வேண்டும் என்றால் உதவிக்கு கிழே உள்ள 

படத்தை பார்க்கவும் 



நீங்கள் CONNECT செய்தது போதும் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றால் கிழே 

உள்ள படத்தை பார்க்கவும் CONNECT அதை கிளிக் செய்து நிறுத்தி 

கொள்ளலாம் 




இதில் MEETING என்ற வசதியும் உள்ளது, 25 பேர் வரை இதில் இணைந்து ஒரே நேரத்தில் 

வீடியோ Conference போல செயல்படலாம் .






இந்த மென்பொருள் பற்றி என்னோட கருத்து :

இந்த மென்பொருள் தொழில் நுட்ப பதிவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக 

இருக்கும் உபயோகம் செய்ய ரொம்ப ஈசியாக இருக்கு உங்க ப்ளாக் யில் 

எதாவது பிரச்னை அல்லது கணினியில் பிரச்னை என்றால் என்னை தொடர்பு

கொள்ளலாம் உங்கள் ப்ளாக்யில் என்னை நிர்வாகி மற்றம் செய்யலாமே 

உங்கள் வலைதளங்களில் உள்ள பிரச்சனைகளை சரி செய்து தருகிறேன் 

(நான் இரவு வேலை என்னை தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் பகலில் 

மட்டுமே தொடர்பு  கொள்ளவும் 
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: தொலைவில் உள்ள கணினியை அருகில் இல்லாமலே இயக்கலாம் Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top