Latest News

Sunday, April 13, 2014

கம்ப்யூட்டரில் வைரஸ் பிரச்னையா?


Tablet pc, Mini computer, Anroid Smartphone, Computer போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பச் சாதனங்கள் நம்மை ஆளும் காலம் இது. கம்ப்யூட்டர் உலகில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய கண்டுபிடிப்புகள் ஆச்சர்யத்தில் திக்குமுக்காடச் செய்கிறது.. அனைத்துக் கண்டுபிடிப்புகளுமே கணினி அடிப்படையில் அமைந்தது தான் என்பதை யாரும் மறுக்க இயலாது.

கணினி பயன்பாடு என்பது மிக மிக அதிகரித்து வருவதே இதற்கு காரணம். உலக மக்களில் பெரும்பாலானோரிடம் கணினி உள்ளது. ஆனால் கணினியைப் பயன்படுத்த தெரிந்தவர்களுக்கு, அதில் வைரஸ் போன்ற பிரச்னைகள் வந்தால் என்ன செய்வதென்பது தெரியவில்லை.

Solution-for-virus-removing-in-computer


மீதிப் பேருக்குத் தெரிந்தாலும், அவர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொண்டால் கூட, கணினியில் உள்ள புரோகிராமில் உள்ள ஏதேனும் ஒரு வழுவைப் பயன்படுத்தி த்ரோஜன் ஹார்ஸ் போன்ற வைரஸ்கள் (trojan horse virus) கம்ப்யூட்டரில் சாமர்த்தியமாக நுழைந்துவிடுகிறது.


இதில் என்ன வேடிக்கை என்றால் ஆண்ட்டி வைரஸ் மென் பொருள் (Active Anti virus software) இயக்கத்தில் உள்ள கம்ப்யூட்டர்களில் கூட சில நேரங்களில் அவற்றை மீறி இத்தகைய வைரஸ்கள் கணினியில் நுழைந்துவிடுவதுதான்.

இவ்வாறு கணினியில் நுழையும் வைரசானது தனது வேலையைக் காட்டத் துவங்கிவிடுகிறது. இவ்வாறு உள்ள நிலையில் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்களைப் பார்க்கலாம்.

வைரஸ் பாதிக்கப்பட்டதாக உணரும் கம்ப்யூட்டில் "வைரஸ் சோதனை" செய்யவும்.

உங்களிடம் உள்ள ஒரிஜினல் ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் (Original Anti-virus software) மூலம் இதைச் செய்யலாம்.

ஒரிஜினல் மென்பொருள் இல்லாதவர்கள் உடனடியாக வைரஸ் ஆண்ட்டி வைரஸ் மென்பொருளை வாங்கி உங்களுடைய கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.

விண்டோஸ் டாஸ்க் மேனேஜரை இயக்கி ஏதேனும் வித்தியாசமான புரோகிராம் இயங்குகிறதா? என சோதனை செய்யலாம்..

மிக மோசமான மால்வேர் புரோகிராம்கள், நாம் அதனை நீக்க எடுக்கும் வழிகளை மிகச் சாதுர்யமாகத் தடுக்கும். இவற்றை நீக்க நாம் msconfig அல்லது regedit ஆகிய வழிகளில் முயற்சிகளை எடுத்தால், அவற்றை இயக்கவிடாமல், மால்வேர் தடுக்கும்.

வைரஸ் இருப்பதை உறுதிப்படுத்த: 


அதே போல, கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், லோட் ஆகிச் செயல்படாமல் தடுக்கப்பட்டால், மால்வேர் புரோகிராம் ஏதோ ஒன்று உள்ளே தங்கி வேலையைக் காட்டுகிறது என்று உறுதியாக எடுத்துக் கொள்ளலாம். சில வேளைகளில், இந்த வைரஸ் புரோகிராமின் செயல்பாடுகள்  (Actions of Virus Program) மிக வெளிப்படையாகவே இருக்கும்.

நீங்கள் இதுவரை அவ்வளவாகப் பயன்படுத்தாத புரோகிராம் ஒன்று, திடீரென இயங்கத் தொடங்கி, நமக்கு எச்சரிக்கைகளை அளித்து, குறிப்பிட்ட ஒரு செயலாக்க (executable) பைல் ஒன்றை இயக்குமாறு தெரிவித்தால், நிச்சயம் அது ஒரு வைரஸின் வேலையாகத்தான் இருக்கும்.

உங்கள் கம்ப்யூட்டர் முடக்கப்படப் போகிறது எனத் தொடங்கி, குறிப்பிட்ட தளத்தில், பிரச்னையைத் தீர்ப்பதற்கான உடனடி தீர்வு புரோகிராம் இருப்பதாகச் சொல்லி, உங்களை தடுமாற வைத்து, வழி நடத்தி, இடையே, உங்களின் கிரெடிட் கார்ட் (Credit Card) அல்லது வங்கி கணக்கு (Bank Account) எண்களை கேட்டால், உடனே சுதாரித்துக் கொண்டு, கம்ப்யூட்டர் செயல்பாட்டினையே ஒதுக்கி வைத்து, வைரஸ் நீக்கும் முயற்சிகளைத் தொடங்குங்கள்.

இப்படி பயமுறுத்திச் சாதிக்கும் பல மால்வேர் புரோகிராம்கள், இணையம் எங்கும் நிறைந்துள்ளது.

என்ன வகையான வைரஸ் என்பதை அறிந்துகொள்ள: 


வைரஸ் புரோகிராம் உங்களுக்கு அளித்திடும் எச்சரிக்கை செய்தியிலிருந்து சில சொற்களைக் காப்பி செய்து, வேறு ஒரு கம்ப்யூட்டரில், உங்களுக்கு பழக்கமான தேடல் சாதனம் மூலம் தேடலை மேற்கொள்ளவும்.

இதே வைரஸால் இதற்கு முன் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் அனுபவத்தினையும், தாங்கள் பயன்படுத்திய தீர்வுகளையும் இணையத்தில் பதிந்து வைத்திருந்தால், அவை உங்களுக்குக் கிடைக்கும்.

இதில் கவனமாக இருந்து, சரியான தீர்வுகளை மட்டும் பயன்படுத்திப் பார்க்கலாம். பயன்படுத்திய பின்னர், உங்கள் கம்ப்யூட்டர் முழுவதையும், ஸ்கேன் செய்து மாற்றங்களை உணரவும்.

இதே வைரஸால் இதற்கு முன் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் அனுபவத்தினையும், தாங்கள் பயன்படுத்திய தீர்வுகளையும் (Solution for virus affected computer) இணையத்தில் பதிந்து வைத்திருந்தால், அவை உங்களுக்குக் கிடைக்கும். இதில் கவனமாக இருந்து, சரியான தீர்வுகளை மட்டும் பயன்படுத்திப் பார்க்கலாம்.

பயன்படுத்திய பின்னர், உங்கள் கம்ப்யூட்டர் முழுவதையும், ஸ்கேன் செய்து மாற்றங்களை உணரவும்.நீங்கள் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை, கம்ப்யூட்டரில் வந்துள்ள வைரஸ் மடக்கிப் போட்டிருந்தால், நீங்கள் என்ன முயன்றும் தீர்வு கிடைக்காது.

எனவே புதிய இன்னொரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை (New Anti virus Program), யு.எஸ்.பி. ட்ரைவில் அல்லது சிடியில் வைத்து இயக்கிப் பார்க்கலாம். இயக்கிப் பார்க்கும் முன், உங்கள் கம்ப்யூட்டரை சேப் மோடில் இயக்கி, இந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: கம்ப்யூட்டரில் வைரஸ் பிரச்னையா? Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top