இன்று தகவல்தொழில்நுட்பத் துறையில் (Information Technology) பல்வேறு அதிசயங்கள் நடந்துகொண்டுள்ளன. அனைத்திற்கும் காரணம் மொன்பொருள் தயாரிக்கும் வல்லுநர்கள்தான்.
அன்றாடத் தேவைகளுக்கே இன்று அனைவரும் டிஜிட்டல் சாதனங்களையே நம்பியுள்ளனர். டிஜிட்டல் சாதனங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான அங்கமாகவே (A part of human life) மாறிவிட்டது.
எந்த ஒரு துறையானாலும் கணினி சார்ந்த டிஜிட்டல் சாதனங்களே கோலோச்சுகின்றன. அவற்றிற்கு மூல உயிர் தரும் பிரம்மாக்களாக தொழில்நுட்ப , மென்பொருள் வல்லுநர்கள் (Software Engineers) விளங்குகின்றனர்.
Image credit: wikipedia.
இவர்கள் தயாரித்து, உருவாக்கும் மென்பொருள்களாலேயே இத்தகைய சாதனங்கள் இயங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு சக்தி மிக்க பணியை ஆற்றும் மென்பொருள் உருவாக்குனர்கள் உலகில் எத்தனை பேர் இருக்கிறார்கள் தெரியுமா? ஒரு கோடியே என்பத்தைந்து லட்சம் பேர் (1,085,0000 ). சமீபத்தில் ITC அமைப்பு எடுத்த ஆய்வின் அறிக்கை முடிவு இது.
இவர்களில் 1 கோடியே பத்து லட்சம் பேர், மற்ற மென்பொருள் நிறுவனங்களில் (Software Companies) பணியாற்றும் சாப்ட்வேர் என்ஜினியர்கள் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனிப்பட்ட முறையில் மென்பொருட்களை தயாரிப்பு பணியில் ஈடுபடுபவர்கள் மற்றும் பொழுது போக்கிற்றாக மென்பொருட்களை உருவாக்குபவர்களின் எண்ணிக்கை 75 இலட்சம் பேர்.
நிறுவனங்களில் பணிபுரிபவர்களைக் காட்டிலும் தனிப்பட்ட முறையில் மென்பொருட்களை உருவாக்குபவர்கள், விரைவாகவும், சுதந்திரமாகவும் மென்பொருட்களை தயாரிக்கிறார்கள். (Freedom Software Makers)
உலகளவில் கணினி மற்றும் மென்பொருள் துறையில் பணியாற்றுபவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடி பேர்.
உலகத்தில் 700 கோடி மக்கள் வாழ்கிறார்கள். 700 கோடியில் 2 கோடி பேர் மட்டும் தகவல்தொழில்நுட்பம் சார்ந்த, கணினி சார்ந்த, மெட்பொருட்கள் சார்ந்த பணிகளில் ஈடுப்பட்டிருக்கிறார்கள் என்பது மிக மிக குறைந்தளவு எண்ணிக்கை ஆகும்.
குறைந்தளவே உள்ள மென்பொருள் உருவாக்குநர்கள், கணினி சார்ந்த பணியாளர்கள் இருப்பினும் உலகையே உள்ளங்கையில் சுருக்கிவிட்டனர் என்பது உண்மை. அவர்கள் ஒரு சிறு தீப்பொறி போன்றவர்கள்.
எந்நிலையிலும் அணையாமல் அப்படியே பற்றிக்கொண்டு உலகையே.. ஏன் இந்த பிரபஞ்சத்தையே பற்றிக்கொள்ளும் சக்தி மிக்க படைப்பாளிகள் அவர்கள்..!
ஒரு ரூபாய் போட்டால் ஒரு டம்பளர் தண்ணீர் கொடுக்கும் மிஷின்கள் (Water Machine), பணத்தை கொடுத்தால் பஸ்டிக்கெட் கொடுக்கும் மிஷின்கள், ATM -ல் கார்டை செருகினால், சரியாக அவரது கணக்கில் உள்ள பணத்தை எண்ணி வெளித்தள்ளும் தொழில்நுட்பம் என இன்று நாம் காணும் அனைத்து நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் (Computer digital technology) செயல்பட அதில் உள்ள மென்பொருள் உள்ளிட புரோகிராம்கள் செய்யும் வித்தைகள்தான்..
அந்த வித்தைகளுக்குச் சொந்தக்கார்ரகள் மென்பொருள் உருவாக்குனர்களே… ஆளில்லா காரும், ஆளில்லா விமானமும், ஆளில்லா ரெயில் வண்டியும், ஏன் ஆளில்லா செயற்கைகோள்களும், குறிப்பிட்ட எல்லையை சென்றடைவதும், மனிதர்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத விண்வெளிக் கோள்களுக்கு விண்கலங்களை செலுத்தி ஆய்வு செய்ய பயன்படுவதும் அவற்றைக் கட்டுப்படுத்துவதும் கம்ப்யூட்டர் புரோகிராம்கள் (computer programs and softwares) மற்றும் அதைச் சார்ந்த மென்பொருட்கள்தான்.
அத்தகைய சாதனங்களை இயக்க வைப்பதற்கும், நினைத்த இடத்தில் விண்வெளியில் நிலைநிறுத்துவதும் பயன்படுவையும் அதிலுள்ள கணினிச் சார்ந்த புரோகிராமிங் கட்டளைகள் உள்ளிட்ட மென்பொருட்கள்தான். அவற்றை படைத்து உருவாக்கியவர்கள் “உலகையே கலக்கும் மென்பொருள் வல்லுநர்கள்தான்.
இலவச மென்பொருட்கள் மற்றும் தரவிறக்கம் செய்வதற்கான குறிப்புகளை அறிந்துகொள்ள SoftwareShops இணையதளம் உங்களுக்கு பயன்படும்.
நன்றி.
0 comments:
Post a Comment