[IST] Ads by Google இன்டர்நெட் இன்றைய மக்களின் அன்றாட வாழக்கையில்
மிக்ப்பெரிய வகிக்கிறது. தொலைதூரத்தில் இருக்கும் நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ அல்லது குடும்பத்தாரிடமோ முன்பெல்லாம் போனில் தான் பேசு முடியும். இன்டர்நெட் மற்றும் தொழில்நுட்பத்தின் அசூர வளர்ச்சிக்கு பின்னர் வெளியூரில் இருப்பவர்களிடமோ அல்லது வெளிநாட்டில் இருப்பவர்களிடமோ பேசுவது எளிதாகிவிட்டது. அதவும் ஸ்கைப் போன்ற சேவைகள் இதை மிகவும் எளிதாக்கிவிட்டன. ஸ்கைபில் உள்ள வீடியோகாலிங் மூலம் யாரிடம் பேசுகிறமோ அவர்களை திரையில் பார்த்துக்கொண்டே பேசலாம். இப்பொழது ஸ்கைப் 3டி வீடியோ காலிங் சேவையை உருவாக்கும் முயற்ச்சியில் உள்ளது. இப்பொழுது இருக்கும் 3டி டெக்னாலஜிகள் குறைவாக உள்ளதால் 3டி வீடியோ காலிங் தாமதமாகி வருகிறது. மைக்கிரோசாப்ட் கார்ப்பரேஷனில் ஸ்கைபின் வைஸ் பிரஸிடென்டாக இருக்கும் மார்க் ஜில்லெட், 3டி வீடியோ காலிங்கான லேப் எக்ஸ்பிரிமென்ட் முடிந்து விட்டதாகவும் இதில் நிறைய ஸ்கிரீன் பிராகிரஸ் செய்ய வேணடும் என தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் மக்கள் இப்பொழுது அதிகமாக 3டி டிவி மற்றும் கம்பியூட்டர்களை வாங்க தொடங்கிவிட்டனர் ஆனால் 3டி கேப்சரிங் சாதனங்கள் அதிகமாக இல்லை அதனால் எங்கள் மும்முரமாக வேலை செய்து வருகிறது என கூறினார். விரைவில் ஸ்கைபின் 3டி விடியோ காலிங் சேவை வரும் என்று எதிர்பார்க்கலாம்.
Sunday, March 16, 2014
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment