Latest News

Tuesday, January 7, 2014

கணினியில் உள்ள வெற்று போல்டர்களை நீக்க


வீடு என்றால் பூஜைஅறை, சமயல்அறை, படுக்கைஅறை, மற்றும் நம்முடைய வசதிக்கேற்ப தனித்தனி பகுதிகளாக வீட்டினை கட்டி வைத்திருப்போம். அதுபோல கணினியில் உள்ள தகவல்களை தனித்தனி பகுதிகளாக பிரித்து வைத்துகொள்ள நாம் பெரிதும் பயன்படுத்துவது கோப்பறை(Folder) ஆகும். இந்த கோப்பறைகளை நாம் எளிதில் உருவாக்க முடியும். புதிதாக கணினியை பற்றி கற்றுக்கொள்ளும் போது, இந்த கோப்பறை உருவாக்கத்தினை பற்றியும் தெரிந்து கொள்வோம். இவ்வாறு உருவாக்கும் போல்டர்களை நாம் முறையாக பராமரிப்பது இல்லை. எதற்காக உருவாக்கினோம் என்று கூட தெரியாமல் நம் கணினியில் பல்வேறு கோப்பறைகள் இருக்கும். ஆனால் அதைவிட பெரிய கொடுமை என்னவென்றால் வெற்றுகோப்பறைகள் பல நம்கணினியில் இருக்கும். இதனால் நம் கணினிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும். நாம் எதாவது ஒரு கோப்பினை தேடும் போது, ஒவ்வொரு கோப்பறையாகதான் சென்று தேட வேண்டும், அவ்வாறு தேடும் போது இந்த வெற்றுகோப்பறைகள் நமக்கு எரிச்சலை உண்டாக்கும். வீட்டு பயன்பாடு என்றால் சரி ஆனால் அலுவலக பயன்பாடு என்றால் சொல்ல தேவையில்லை. சரி இவ்வாறு இருக்கும் வெற்று போல்டர்களை நாம் ஒவ்வொன்றாக தேடி நீக்க வேண்டும் என்றாலும் அதுவும் சலுப்பூட்ட கூடிய விஷயம்தான், ஆனால் இதுபோன்ற வெற்று கோப்பறைகளை அழிக்க ஒரு இலவச மென்பொருள் உள்ளது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி



மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் Open Folder என்னும் பொத்தானை அழுத்தி எந்த ட்ரைவினை (C: D: E: ) குறிப்பிட்டு ஒகே செய்யவும். சிறிது நேரத்தில் ஸ்கேன் செய்யப்பட்டு வெற்று கோப்பறைகள் பட்டியலிடப்படும். அதை தேர்வு செய்து Delete Checked From Disk என்னும் பொத்தானை அழுத்தி நீக்கி கொள்ளவும். இதே முறையை பின்பற்றி கணினியில் உள்ள அனைத்து வெற்று கோப்பறைகளையும் நீக்கி கொள்ள முடியும். இதன் மூலம் மேலும் உங்கள் கணினியை நீங்கல் அழகுபடுத்த முடியும்.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: கணினியில் உள்ள வெற்று போல்டர்களை நீக்க Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top