Latest News

Sunday, December 8, 2013

இலவச ஆல் இன் ஒன் மென்பொருள் மற்றும் லைசென்ஸ் கீகள் மீட்டெடுக்க மென்பொருள்

நண்பர்களே உங்கள் கணினியில் எந்த மென்பொருள் நிறுவி இருந்தாலும் அதற்கு நீங்கள் உரிமம் வாங்கி நிறுவி இருப்பீர்கள் சில நேரம் அந்த உரிம எண் உங்களிடம் தொலைந்து போயிருக்கலாம். ஆனால் அந்த மென்பொருள் அப்படியே உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருந்தால் அந்த நிறுவப்பட்ட மென்பொருளிலிருந்து அந்த மென்பொருளுக்கான உரிம எண் தேடி எடுக்கலாம்.  அதற்கு இந்த மென்பொருள் மிகவும் உபயோகமாக இருக்கிறது.  மென்பொருள் சுட்டி 




இசை டிஜேக்களுக்கான ( DJ - Disc Jockey) மென்பொருள் மிகவும் விலை அதிகம் ஆனால் இலவசமாக அனைவரும் உபயோகப்படுத்தும் வகையில் சுலபமாக இருக்கிறது இந்த மென்பொருள்.  அதுவும் இந்த மென்பொருள் ஒரு கட்டற்ற மென்பொருள் என்பது கூடுதல் சிறப்பு.  மென்பொருளின் பெயர் மிக்ஸ் என்பதாகும்.  இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி



இலவச வீடியோ கன்வெர்டர் வகையில் இதுவும் வருகிறது. மென்பொருள் பெயர் FreeMake Video Converter ஆனால் இந்த மென்பொருள் செய்யும் செயல்கள் அதிகம்.   மிகவும் நிறைய வகையான கோப்புகளை ஆதரிக்கிறது.  மென்பொருளில் இருந்து நேரடியாக யூட்யூபில் பப்ளிஷ் செய்யலாம்.  டிவிடி சிடி எரிக்கலாம்.  போட்டோ ஸ்லைடு ஷோ செய்யலாம்.  வீடியோ எடிட்டிங் செய்யலாம்.  மென்பொருளை தரவிறக்க சுட்டி


இந்த மென்பொருள் ஆதரிக்கும் கோப்பு வகைகளை தெரிந்து கொள்ள சுட்டி


இந்நிறுவனத்தின் இன்னும் ஒரு தயாரிப்பு FreeMake Video Downloader  இந்த மென்பொருள் வீடியோ தளங்களிலிருந்து படங்களை தரவிறக்க உதவுகிறது.  மென்பொருள் தரவிறக்க சுட்டி



இந்த இரண்டு மென்பொருளையும் சேர்த்து தரவிறக்க விரும்புவர்களுக்காக FreeMake Suite என்று வெளியிடப்படுகிறது.  தரவிறக்க சுட்டி


Newer Post
Previous
This is the last post.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: இலவச ஆல் இன் ஒன் மென்பொருள் மற்றும் லைசென்ஸ் கீகள் மீட்டெடுக்க மென்பொருள் Description: sowftware Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top