Latest News

Tuesday, January 20, 2015

உங்கள் போனில் போட்டோஸ் மற்றும் வீடியோவை ரகசியமாக வைக்க வேண்டுமா..?




ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் பெரிய பிரச்சனையே தங்களுடைய ரகசியங்களை காப்பாற்றுவது எப்படி என்று தெரியாததுதான்.
புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் நமது ஸ்மார்ட்போனில் என்ன தான் லாக் செய்து வைத்திருந்தாலும், எளிதாக ஹேக்கர்களின் கைகளுக்கு சென்றுவிடுகிறது.
இதெற்கென எத்தனையோ ஆப்ஸ்-கள் வந்தாலும் அவை அனைத்தையும் எளிதாக கடந்து உள்ளே சென்று புகைப்படங்களை பார்க்க முடிகின்றது.
கேலரியை லாக் செய்தால் எல்லா போட்டோஸுமே லாக் ஆகும். ஆப் லாக் போட்டு லாக் செய்தால் செட்டிங்ஸ்-ல் போய் ஃபோர்ஸ் ஸ்டாப் (Force Stop) செய்து ஆப்ஸை க்ளீன் போல்ட் ஆக்கி உள்ளே நுழைந்துவிடலாம்..
நம் ஸ்மார்ட்போனுக்கு ஏற்ற ஸ்மார்ட் சேஃப் ஆப் -இன்று அதிகபட்ச ஸ்மார்ட்போன் யுசர்களால் டவுன்லோடு செய்யப்பட்டிருக்கும் மிகச் சிறந்த ஆப் தான் - கீப் சேஃப் ஆப்ஸ் (Keep Safe Vault).
நாம் எவ்வளவுதான் லாக்கிங் ஆப்ஸ் போட்டு கேலரியை பாதுகாப்பாக வைத்தாலும், சிலர் ஈஸியாக உள்ள நுழைந்து நம்ம கேலரியை யூஸ் பண்ண ஆரம்பிச்சிடுறாங்க.
அப்படி நடக்காமல் இருக்க கீப் சேஃப் ஆப்ஸ்-ஐ இன்ஸ்டால் செய்வதுதான் பெஸ்ட் சாய்ஸ். இதை ஐ-போன், ஸ்மார்ட்போன்களிலும் இன்ஸ்டால் செய்யலாம்.
இந்த ஆப்ஸ்-ஐ இன்ஸ்டால் செய்ததும் நமது இ-மெயில் அக்கவுண்ட வைத்து ரிஜிஸ்டர் செய்து ஆப்ஸ்-ஐ ஆக்டிவேட் செய்தால் போதும். நமக்கு தேவையான போட்டோஸ், வீடியோவை மட்டும் லாக் பண்ணி வைத்துக் கொள்ளலாம். இது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்.
நம்ம கீப் சேஃப் ஆப்ஸ்-ன் ஸ்பெஷாலிட்டியே ஃபேக் பாஸ்வேர்ட் அன்ட் ஃபேக் பேக்ரவுண்ட் தான். யாராவது கீப் சேஃப் ஆப்-ஐ ஒப்பன் செய்தால் ஸ்கீரின் System Scan Complete-என்று தான் வரும். ஸ்கேனர்னு நினைத்து அவங்களும் அப்படியே விட்டு விடுவார்கள்.
ஆனா நமக்குதான் தெரியும் கீப் சேஃப் லோகோவை ப்ரெஸ் செய்தால் மட்டுமே பாஸ்வேர்ட் ஸ்கிரீனை ஓப்பன் செய்ய முடியும் என்று. அப்படியே அவர்கள் போனாலும் நம்பர் பாஸ்வேர்ட் போட்டால்தான் ஸ்கிரீனை ஓப்பன் செய்ய முடியும்.
இவற்றிலும் ஒரு ட்ரிக் உண்டு. ஃபேக் பின் போட்டு நம்மால் உள்ளே போகமுடியும் ஆனால் உள்ள எந்த போட்டோஸ், வீடியோஸும் இருக்காது.
நமக்கு மட்டுமே தெரிந்த சீக்ரெட் பாஸ்வேர்ட் போட்டால் மட்டுமே கேலரி ஓப்பன் ஆகும்.
அந்த கேலரிக்கும் நம்ம குறிப்பிட்ட பாஸ்வேர்ட் சேவ் செய்துவிட்டால் போதும். உங்களோட கேலரியை ஸாரி ஸாரி உங்களோட ப்ரைவேட் கேலரி ஓவர் சேஃப்.. இந்த ஆப்ஸோட இன்னொரு ஸ்பெஷாலிட்டி நம்ம செட்டிங்க்ஸ்&ல ஃபோர்ஸ் ஸ்டாப் (Force Stop) செய்தாலும் இந்த ஆப் வேலை செய்து கொண்டே தான் இருக்கும்.
கீப் சேஃப் ஆப்ஸை டவுன்லோட் செய்ய இந்த link-ஐ கிளிக் செய்யவும்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: உங்கள் போனில் போட்டோஸ் மற்றும் வீடியோவை ரகசியமாக வைக்க வேண்டுமா..? Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top