இன்று நாம் அனைவரும் அதிகம் பயன் படுத்துகின்ற தொலைபேசிகள் அனைத்தும் அன்ட்ராய்ட் சாதனமாகவே இருக்கின்றது. இதிலே (யூடியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்ய) சமூக
வலைதளங்கள், அல்லது ஏனைய இணைய தளங்களில் உள்ள வீடியோ கோப்புக்களையும்
பதிவிறக்கி, இணைய இணைப்பு இல்லாத சந்தர்ப்பங்களில் அதனை பயன்படுத்த
அனைவரும் விரும்புவோம் அல்லவா. அதனை எவ்வாறு பதிவிறக்குவது என்பதனை இன்றைய
பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.
Google Play ற்கு சென்று Tube Video Downloader Application ஐ பதிவிறக்கி உங்களது அன்ட்ராய்ட் தொலைபேசிகளில் நிருவிக்கொள்ளுங்கள்.
நீங்கள் பயன்படுத்துகின்ற சமூக வலைதளங்களில் நண்பர்கள் பகிருகின்ற
வீடியோக்களை பதிவிறக்கிக் கொள்ள வீடியோ மீது Tap செய்யுங்கள். (உதாரணதுக்கு
நான் முகநூலை பயன்படுத்துகின்றேன்.)
Step - 02.
நீங்கள் வீடியோ மீது Tap செய்ததும் மேல் உள்ளது போன்று ஒரு விண்டோ தோன்றும்
அதிலே நீங்கள் நிருவி உள்ள Tube Video Downloader தோன்றும் அதன் மீது Tap
செய்யுங்கள்.
Step - 03.
நீங்கள் Tap செய்ததும் Tube Video Downloader திறக்கப்பட்டு அதிலே Save
Video as : விண்டோ தோன்றும், அதில் நீங்கள் பதிவிறக்கும் வீடியோ
கோப்புக்கான பெயரினை வழங்கி Download என்பதனை Tap செய்யுங்கள்.
Step - 04.

Download மீது Tap செய்ததும் உங்களது வீடியோ பதிவிறங்க ஆரம்பிக்கும். Tube
Video Downloader இல் உள்ள ஒரு சிறப்பம்சம் என்ன என்றால் ஒரே தடவையில்
எத்தனை வீடியோக்களை வேண்டுமானாலும் தரவிறக்கி கொள்ள முடியும்.
Step - 05.
நாம் பதிவிறக்கிக்கொண்ட வீடியோக்களையும் பார்ப்பதற்கு மேலே படத்தில் வட்டமிட்டுள்ள Folder மீது Tap செய்யுங்கள்.
Step - 06.
அதிலே நீங்கள் வழங்கிய பெயரினை கொண்டு தேடுங்கள். நான் வழங்கிய பெயர் video_7.mp4 அதனை படத்தில் காணலாம்.
0 comments:
Post a Comment