Latest News

Monday, May 19, 2014

iOS சாதனங்களுகான புதிய Skype அப்ளிக்கேஷன்.

அப்பிளின் iOS இயங்குதளத்தில் செயற்படக்கூடிய சாதனங்களுக்காக Skype அப்ளிக்கேஷனின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Skype 4.17 எனும் இப்புதிய பதிப்பில் அறிவிப்பு வசதி(Notifications) மெருகூட்டப்பட்டுள்ளதுடன், உயர்தர இருவழி வீடியே அழைப்புக்களை ஏற்படுத்தும் வசதியும் தரப்பட்டுள்ளது.
அப்பிளின் அப் ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்யக்கூடியதாகக் காணப்படும் இந்த அப்ளிக்கேஷனை iOS 5 மற்றும் அதற்கு பின்னர் வெளியிடப்பட்ட இயங்குதளங்களைக் கொண்ட iPhone 3GS, iPhone 4, iPhone 4S, iPhone 5, iPhone 5C, iPhone 5S, iPod Touch (3/4/5th Generation), அனைத்து வகையான iPad, iPad Mini, iPad Air மற்றும் iPad Mini Retina ஆகியவற்றில் நிறுவிப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: iOS சாதனங்களுகான புதிய Skype அப்ளிக்கேஷன். Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top