Latest News

Thursday, May 8, 2014

விரைவாக வீடியோக்களை காண மென்பொருள்


இணையவேகம் குறைவாக உள்ள கணினிகள்(Low speed internet connection) யூடியூப் போன்ற வீடியோ தளங்களிலிருந்து வீடியோக்களை பார்ப்பது என்பது சிரமமான விஷயம்.  காரணம் குறைந்த வேகம் கொண்ட இணைய இணைப்புகளில் வீடியோ பைல்கள் தரவிறங்குவது மிகக் குறைந்த வேகத்திலேயே நடைபெறும். 
இதனால் வீடியோ பிளே ஆகும்போது விட்டு விட்டு ஓடும். அதாவது சற்று நேர இடைவெளி விட்டு விட்டு ஓடும். இதனால் ஒரு வீடியோவை முழுமையாக, தொடர்ச்சியாக பார்க்க முடியாது. ஒரு வீடியோவை முழுமையாக பார்த்த திருப்தியைத் தராது. இது வீடியோவை பார்ப்பவர்களுக்கு எரிச்சலை ஏற்படும். 

Software-for-quick-watching-Video-with-Continuation
தொடர்ச்சியாக இடைவிடாது குறைந்த வேகம் கொண்ட இணைய இணைப்புகளில் வீடியோக்களைப் பார்க்க மென்பொருள்கள் (Software for Quick  and continue watching) உதவுகின்றன. 
இவைகள் உங்கள் கணனியில் உள்ள வலைஉலவியில் ஒரு புரோகிராமை இன்ஸ்டால் செய்கிறது. இந்த புரோகிராம் இணையத்தில் காண விரும்பும் வீடியோ கோப்புகள் கணினியில் தேக்கப்பட்டு கிடைப்பதில் உள்ள பிரச்னைகளை சரிசெய்து, விரைவாக வீடியோ கோப்புகள் கணினியில் தேக்கப்பட்டு கிடைக்கச் செய்கிறது. இதனால் வீடியோக்கள் விரைவில் தொடர்ச்சியாக பிளே ஆகிறது. (it configures itself automatically so you can start watching accelerated videos right away.)
விரைவாக வீடியோக்களை காண பயன்படும் மென்பொருள்களில் ஒன்று வீடியோ அக்சலேட்டர் (SPEEDbit Video Accelerator) ஆகும். 
இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமே.
மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய சுட்டி:
http://www.videoaccelerator.com/


  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: விரைவாக வீடியோக்களை காண மென்பொருள் Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top