Latest News

Sunday, April 13, 2014

பேஸ்புக்கை இப்படிதான் பயன்படுத்தனும்..!


இலவசமா கிடைப்பதற்காக பேஸ்புக்கை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்பது தவறான எண்ணம்.

எந்த ஒரு விஷயம் ஆனாலும் சரி,  இலவசமாக கிடைத்தாலே அதை பெரும்பாலானவர்கள் எப்படியெல்லாம் தவறாக பயன்படுத்த முடியும் என்று முயற்சிக்கிறார்கள். ஆனால் அது நல்லதா?

நிச்சயமாக நல்லதில்லை. அப்படியென்றால் பேஸ்புக்கை எப்படி பயன்படுத்த வேண்டும்?
right-ways-to-use-facebook


இதோ அதற்கான வழிமுறைகள்: 

நீங்கள் பார்க்கும் படங்களெல்லாமே, மற்றவர்களும் ரசிப்பார்கள் என்று எதிர்பார்த்து அவற்றைப் பகிர கூடாது. குறிப்பாக அந்தரங்கப் படங்கள்.

உங்களுடைய தனிப்பட்ட கருத்து மற்றவர்களை பாதிக்கும் என்றால் நிச்சயம் அதை பகிரவே கூடாது. குறிப்பாக மதச் சார்புடைய விமர்சனங்கள்.

உங்களுடைய பதிவுகள் மிக வேகமாக பிரபலமடைய வேண்டும் என்பதற்கான தொடர்பில்லாத குழுக்களில், நபர்களுக்கு பகிர கூடாது.

அரசியல் பதிவுகள் கூடாவே கூடாது. ஆனால் இப்பொழுது தேர்தல் சமயம் என்பதால் பேஸ்புக்கில் அரசியல் பதிவுகள் களைகட்டுகிறது. இதனால் ஏற்படும் பின்விளைவுகளை உணர்ந்தால் யாருமே அரசியல் பதிவுகளை பதிவிடவே மாட்டார்கள்.

என்னதான் நட்பாக இருந்தாலும்,தனி நபர் சுதந்திரத்தில் தலையிடக்கூடாது.

உயிருக்குயிரான நண்பர்களாக இருப்பினும் சில பர்சனல் மேட்டர்களை பேஸ்புக் மூலம் பகிரவே கூடாது. காரணம் உங்களுடைய பிரைவசியை நீங்கள் இழக்க கூடும். பாதுகாப்பற்றதும் கூட..

சிலர் விதவிதமான பொய்யான தகவல்களை பரப்புகின்றனர். இவர்களின் நோக்கம் வெகு விரைவாக பாப்புலர் ஆவதுதான். ஆனால் உண்மையை நிலையை மற்றவர்கள் உணர்ந்தால் உங்கள் பாப்புலாரிட்டி ஒரே நொடியில் பாதாளம் போய்விடும்.

பேக் ஐ.டி வைத்து பிரச்னையில் சிக்க வேண்டாம். சிலர் Fake ஐ.டியில் கலக்கிக்கொண்டிருப்பார்கள். அது பேக் ஐ.டியா இல்லை ஒரிஜினலா என நண்பர்களுக்குத் தெரிகிறதோ இல்லையோ பேஸ்புக்கிற்கு கண்டிப்பாக தெரியும்.

மற்றவர்கள் ஏமாற்றலாம் என்று நீங்கள் நினைத்தால் வெகு விரைவாக நீங்களே ஏமாந்துவிடுவீர்கள்.

உண்மைத் தன்மையுடன் கூடிய செய்திகளை மட்டுமே பகிருங்கள்.மற்றவர்களுக்கு பயனுள்ளதாக அவை இருக்கட்டும்.

அப்போதுதான் உண்மையிலேயே நீங்களும் பேஸ்புக் ஹீரோ ஆக முடியும்.

இதுதான் பேஸ்புக்கை பயன்படுத்தும் முறை. தெரிஞ்சுக்கோங்க.. பிரச்னையில்லாம பேஸ்புக்கை பயன்படுத்தறது எப்படின்னு புரிஞ்சுக்கோங்க...
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: பேஸ்புக்கை இப்படிதான் பயன்படுத்தனும்..! Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top