Latest News

Wednesday, March 19, 2014

கணினியில் உங்களின் முக்கியமான பாஸ்வேர்ட்களை கவனமாக பாதுகாக்க - KeePass Safe2.18


போட்டிகளும், பொறாமைகளும் நிறைந்த உலகில் ஹாக்கிங் செயல்களில் இருந்து உங்கள் கணக்குகளை பாதுகாக்க மிகவும் கடினமான கடவுச்சொற்களை உங்கள் கணக்குகளுக்கு கொடுத்து இருப்பீர்கள். இது போல ஒவ்வொரு கணக்கிருக்கும் வெவ்வேறான கடவுச்சொற்களை கொடுத்து இருப்பதால் அதை அனைத்தையும் ஞாபகம் வைத்து கொள்வது இயலாத காரியம். ஏதாவது ஒரு கணக்கை ஒரு வாரம் கழித்து ஓபன் செய்தால் ஒரு சிலருக்கு சுத்தமாக அந்த பாஸ்வேர்ட் மறந்து விடும். ஒரே பாஸ்வேர்ட் கொடுத்தாலும் ஹாக்கிங் பிரச்சினை வெவ்வேறு பாஸ்வேர்ட் கொடுத்தாலும் மறந்து விடும் பிரச்சினை என ஒரே பிரச்சினையாக உள்ளதா உங்களுக்காகவே ஒரு பயனுள்ள இலவச மென்பொருள் உள்ளது.


இந்த மென்பொருளில் உங்களின் அனைத்து பாஸ்வேர்ட்களையும் சேமித்து அனைத்திற்கும் சேர்த்து ஒரே மாஸ்டர் பாஸ்வேர்ட் கொடுத்து கொள்ளலாம். அந்த மாஸ்டர் பாஸ்வேர்ட் மட்டும் ஞாபகம் வைத்து கொண்டால் போதும் அனைத்து பாஸ்வேர்ட்களையும் ஞாபகம் வைத்து கொள்ள வேண்டியதில்லை.

மென்பொருளின் சிறப்பம்சங்கள்:
  • நம்முடைய பாஸ்வேர்ட்களை மற்றவர்கள் பார்க்க முடியாதவாறு மிகவும் கவனமாக பாதுகாக்கும்.
  • அனைத்து பாஸ்வேர்ட்களுக்கும் பதிலாக ஒரே மாஸ்டர் பாஸ்வேர்டை மட்டும் ஞாபகம் வைத்து கொண்டால் போதும் மற்றவைகளை சுலபமாக அறிந்து கொள்ளலாம். 
  • யாரும் ஹாக் செய்ய முடியாத கடினமான கடவு சொற்க்களை இந்த மென்பொருள் மூலம் உருவாக்கலாம்.
  • குறிப்பிட்ட ஒரு பைலை மாஸ்டர் பாஸ்வேர்டாக தேர்வு செய்யும் வசதி.
  • பாஸ்வேர்ட்களை ஈமெயில்,விண்டோஸ்,இன்டர்நெட் என தனிதனி பிரிவுகளாக சேமித்து கொள்ளும் வசதி.
  • 2MB அளவே உடைய மிகச்சிறந்த ஓபன் சோர்ஸ் மென்பொருளாகும்.
  • Username கொடுத்தால் பாஸ்வேர்ட் தானாகவே வரும் Auto-type வசதி உள்ளது. மற்றும் இந்த மென்பொருளில் இருந்து பாஸ்வேர்டை காப்பி செய்து இணையத்தில் பேஸ்ட் செய்து கொள்ளலாம்.
  • போர்ட்டபிள் மென்பொருள் என்பதால் கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.
மற்றும் ஏராளமான வசதிகள் உள்ளது. உபயோகித்து பாருங்கள் உங்களுக்கே புரியும் இதன் பயன்கள்.

KeePass உபயோகிப்பது எப்படி:
  • முதலில் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்தால் வரும் ZIP பைலை Extract செய்து Keepass என்ற பைலை ஓபன் செய்யுங்கள்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் உள்ள New என்ற பட்டனை அழுத்தி வரும் விண்டோவில் உங்களின் Master Password தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • மாஸ்டர் பாஸ்வேர்ட் தேர்வு செய்ததும் அடுத்து கீழே உள்ளதை போல விண்டோ வரும் அதில் உங்களின் பாஸ்வேர்ட் வகையை தேர்வு செய்து கொண்டு Add Entry என்ற பட்டனை அழுத்தி உங்கள் பாஸ்வேர்டை சேமித்து கொள்ளலாம்.
  • இதே முறையில் உங்களையுடைய அனைத்து பாஸ்வேர்ட்களையும் இந்த மென்பொருளில் சேமித்து கொள்ளுங்கள்.
  • மற்றும் இந்த மென்பொருள் மூலம் மிக கடினமான பாஸ்வேர்ட்களை உருவாக்கலாம். இதற்கு Tools - Password generate சென்று கடினமான பாஸ்வேர்ட்களை உருவாக்கி கொள்ளலாம்.
  • இதன் மூலம் உருவாக்கும் பாச்வேர்ட்கள் தானாகவே இந்த மென்பொருளில் சேமிக்கப்படும்.
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய- KeePass2.1
8
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: கணினியில் உங்களின் முக்கியமான பாஸ்வேர்ட்களை கவனமாக பாதுகாக்க - KeePass Safe2.18 Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top