Latest News

Friday, January 3, 2014

YouTube இல் கூகிள் ப்ளஸ் கமெண்ட்ஸ் பயன்படுத்துவது எப்படி?

கூகிள் தனது கூகிள் ப்ளஸ் கமெண்ட்ஸ் (Google+ Comments) வசதியை YouTube தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக் கமெண்ட்ஸ் போன்று இணையத்தில் அறிமுகப்படுத்தப் பட்ட இந்த கூகிள்+ கருத்துரை வசதி முதலில் ப்ளாக்கர் தளத்தில் பயன்படுமாறு கொண்டு வரப்பட்டது. கூகிள் தனது சமூகவலைத்தளமான கூகிள் ப்ளஸை மற்ற சேவைகளான தேடல், ப்ளாக்கர், யூடியுப் போன்றவற்றில் இணைப்பதன் மூலம் பயனர்களை அதிகரித்து வருகிறது.

google plus comments in youtube

YouTube இல் கூகிள்+ கமெண்ட்சின் வசதிகள்: 

• வீடியோவை இணைத்தவர்கள், பிரபலங்கள், உங்கள் கூகிள்+ வட்ட நண்பர்கள் ஆகியோரின் கருத்துகள் முதலில் தோன்றும். மேலும் நாமாக Top Comments, New Comments என்று பிரித்துப் பார்க்கலாம்.  
• நீங்கள் இடும் கருத்துகளை அனைவரும் பார்க்க வேண்டும் என்றால் Public ஆகவும் அல்லது குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் எனவும் அமைக்க முடியும்.
 • பதில் கருத்துகள் Threaded முறையில் காட்டப்படும்.
 • வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பருக்கு அதனை காட்ட விரும்பினால் கமெண்ட்டில் அவர் பெயரை Tag / Mention செய்து விடலாம்.
 • கருத்துகளில் URL கொடுக்கும் வசதி – இதன் மூலம் வேறு ஒரு தளத்திற்கு இணைப்பு கொடுக்க விரும்பினால் கமெண்டிலேயே கொடுக்கலாம். 
• கமெண்ட் போட்டவுடன் கூகிள் ப்ளஸில் பகிரும் வசதி மற்றும் Notification பெறும் வசதி
• உங்கள் கருத்துக்கு பதில்களைத் தடுக்க Disable Replies வசதி

இது தவிர ப்ளாக்கரில் வராத Comment Moderation வசதி புதியதாக யூடியுபில் அறிமுகம் 

1.இதன் மூலம் கருத்துகளை எளிதாக நீக்கலாம். குறிப்பிட்ட ஒருவரை முற்றிலும் கமெண்ட் போட முடியாதவாறு Ban செய்யலாம்.
2.மேலும் அனைத்து கமெண்ட்களையும் Moderation வசதி மூலம் அனுமதி அளிக்கவும் நிராகரிக்கவும் முடியும்.
3.குறிப்பிட்ட தகாத வார்த்தைகள் வந்தால் Blacklist இல் சேர்த்து விடலாம். அப்படி Spam Comments வந்தால் உங்களுக்கு நீல நிறத்தில் உங்கள் வீடியோவின் மேல் காட்டப்படும்.

google plus comments in youtube

இந்த வசதியைப் பெற உங்கள் கூகிள் ப்ளஸ் புரோபைலை YouTube இல் இணைத்துக் கொள்ள வேண்டும். கீழுள்ள சுட்டியில் கிளிக் செய்தால் யூடியுபில் உங்கள் விவரங்களுக்குச் செல்லலாம்.

http://www.youtube.com/account அங்கே உங்கள் பெயர், ஈமெயிலுக்கு கீழே உள்ள Link Channel with Google+ என்பதை கிளிக் செய்து Next->Update கொடுங்கள். இதன் பின்னர் நீங்கள் கூகிள்+ கமெண்ட் வசதிகளைப் பயன்படுத்தலாம்.

google plus comments in youtube

புதிய Comment Moderation வசதியை உங்கள் வீடியோக்களுக்கு வைக்க இங்கே செல்லுங்கள்.https://www.youtube.com/comment_management 
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: YouTube இல் கூகிள் ப்ளஸ் கமெண்ட்ஸ் பயன்படுத்துவது எப்படி? Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top