கணனி பாவனையாளர்கள் அதிகம் பயங்கொள்ளும் விடயம் எதுவென்றால் அது கணனி வைரசே ஆகும். ஏனெனில் ஒரு கணனி நிபுணருக்குக் கூட ஒரு கணனியிலிருந்து வைரஸை அகற்றுவதென்பது அவ்வேலைக்காக வடிவமைக்கப்பட்ட கருவிகளின் உதவிகளின்றி செய்வது ஒரு கடினமான பணியாகும்.
சில வைரஸ்களும் சில தேவையற்ற மென்பொருள்களும் (ஸ்பைவெயார்) உட்பட அவைகள் கண்டுபிடிக்கப்பட்டு கணனியிருந்து அகற்றப்பட்ட பின்னரும் மீண்டும் தம்மை நிறுவிக்கொள்ளக் கூடியனவாக வைரஸை தொற்ற வைப்பவர்களால் அந்த வைரஸ்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அதிஷ்டவசமாக மைக்ரோசொப்ட் செக்கியூட்டி எசன்ஸ்ஷல் (Micro Soft Security Essential) போன்ற வைரசுக்கு எதிரான இலவச மென் பொருள்களை பாவிப்பதாலும் உங்களுடைய கணனியை இற்றைப் (Update) படுத்திக்கொள்வதாலும் தேவையில்லாத மென்பொருள்களை நிரந்தரமாக அகற்றிக் கொள்ள உங்களால் இயலக்கூடியதாகவிருக்கும்.
மைக்ரோசொப்ட் அப்டேட்டைச் சென்று பார்வையிட்டு இறுதியாகக் கிடைக்கும் அப்போட் படுத்தல்களை நிறுவிக்கொள்ளுங்கள்.
வைரசுக்கு எதிரான மென்பொருளை தற்போது பயன்படுத்துபவர்களாக இருந்தால் உற்பத்தியாளர்களின் இணையத் தளத்திற்குச் சென்று உங்களுடைய மென்பொருளை அப்டேட் செய்துகொள்ளுங்கள், அதன் பிற்பாடு உங்களுடைய கணனியை நன்றாக ஸ்கேன் செய்து கொள்ளுங்கள். நீங்கள் வைரஸ¤க்கு எதிரான மென்பொருள்களை
பயன்படுத்தாதுவிட்டால் மைக்ரோசொப்ட் செக்கியூரிட்டி எசன்ஸ்ஷல் சேவைகளுடன் சந்தாதாரராகி உடனடியாக உங்களுடைய கணனியைக் ஸ்கேன் செய்து கொள்ளுங்கள.
அபாயகரமான மென்பொருள்களை அகற்றும் கருவியையும் பதிவிறக்கம் செய்து நிறுவி செயற்படுத்துங்கள்.
இந்தக் கருவியானது வைரஸ்கள் உங்களுடைய முறைமையை தொற்றுவதைத் தடுக்கமாட்டாது என கவனத்தில் கொள்ளுங்கள். இவை இருக்கும் வைரஸ்களை அகற்ற மாத்திரமே உதவு செய்யும்.
உங்களுடைய வைரசுக்கு எதிரான மென்பொருள் தற்போதுள்ள ஒன்றாகவும் இறுதியான அப்டேட்டை உள்ளடக்கிய ஒன்றாகவும் வைத்துக்கொள்வது மிகவும் முக்கியமானது. வழமையாக இது Definition File என அழைக்கப்படுகிறது.
அப்போதுதான் கருவி அடையாளத்திற்கு உதவுவதுடன் இறுதியாக வரும் அச்சுறுத்தல்களையும் அகற்றக்கூடியதாகவும் இருக்கும். அத்துடன், எல்லா வைரஸ்களுக்கு எதிரான கருவிகளும் ஒன்றல்ல.
உங்களிடம் உள்ள ஒன்று உங்களுடைய திருப்திக்கு ஏற்றவாறு வேலை செய்யவில்லையென்று நீங்கள் கண்டால், நீங்கள் சில ஆய்வுகளை மேற்கொண்டு ஒரு மாற்றுவழியொன்றை முயற்சிக்க வேண்டும். ஏனெனில், சந்தையில் கெஸ்பஸ்கை, மெக்காபீ, ஏ. வி. ஜி. எவிரா, சைமன்டெக், அவாஸ்ட், பிட் டிபென்டர் என பலவிதமான அன்டிவைரஸ் மென்பொருள்கள் காணப்படுகின்றன.
‘ஒரு வைரஸானது உண்மையிலேயே ஸ்பைவெயாராக இருக்கலாம், வின்டோஸ் டிபென்டர் அல்லது வேறு ஏதாவது அன்டி ஸ்பைவெயாரை பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொண்டு அது பிரச்சினையை தீர்க்கிறதா எனப் பாருங்கள்.
வின்டோஸ் டிபென்டர் ஆனது வின்டோஸ் 7 உடன் வின்டோஸ் விஸ்டாவுடன் வருகிறது.
நீங்கள் விண்டோஸ் XP அல்லது SP2 பயன்படுத்தினால நீங்கள் கட்டணம் இன்றியே வின்டோஸ் டிபன்டெரை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
சந்தையில் வரும் ஒவ்வொரு அன்டிவைரஸ்களும் ஒன்றுக்கொன்று வித்தியாசமான வைரஸ்களை அகற்றக் கூடியனவாகக் காணப்படுகின்றன. எனவே, உங்கள் கணனிக்குப் பொருத்தமான அன்டிவைரஸ் மென்பொருளைத் தேர்ந்தெடுப்பது உங்கள் பொறுப்பாகும்.
0 comments:
Post a Comment