Latest News

Tuesday, January 14, 2014

மூன்று வெவ்வேறு புகைப்படங்களை ஒரே புகைப்படமாக்க



சில நேரங்களில் நாம் பெரிய அளவில் புகைப்படங்கள் எடுக்க வேண்டிவரும்.உதாரணத்திற்கு குரூப் போட்டோ எடுக்கும் சமயம் நம்மிடம் உள்ள சின்னகேமராவில் அவ்வளவு கும்பலையும் கவர் செய்வது கடினமே.அந்த படத்தை நாம் போட்டோஷாப்பில் ஒன்றாக ஆக்கலாம். ஆனால் இந்த சாப்ட்வேரில் ஒட்டியதே தெரியாமல் அழகாக ஒட்டி கொடுக்கின்றது.
 இது டிரையல் விஷன் சாப்ட்வேர். இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.நான் உதாரணத்திற்கு இங்கு 3 புகைப்படங்கள் வெவ்வேறு கோணத்தில் வைத்து எடுத்துள்ளேன்.கீழே உள்ள புகைப்ப்டங்களை பாருங்கள்.முதல் பாக புகைப்படம்.:-இரண்டாவது பாக புகைப்படம்:-மூன்றாவது பாக புகைப்படம்:-இப்போது இந்த சாபட்வேரில் புகைப்படங்கள் உள்ள போல்டரை தேர்வு செய்து அதில் இந்த மூன்று புகைப்படங்களை மட்டும் தேர்வு செய்துள்ளேன்.இதில் உள்ள Start Stich கிளிக் செய்தபின் வந்த விண்டோ கீழே:-படங்களை ஆய்வு செய்கின்றது:
இப்போது மூன்று படங்களையும் ஒட்டியவாறு நமக்கு விண்டோ கிடைக்கும்.
அடுத்துள்ள Export கிளிக் செய்தால் Crop செய்யும் விண்டோவுடன் நமக்கு கீழ்கண்ட படம் ஓப்பன் ஆகும். தேவையேன்றால் இதில் உள்ள ஸ்லைடரை நகர்த்தி நாம் புகைப்படத்தை ஒழுங்கு செய்து கொள்ளலாம்.இறுதியாக ஓ,கே.கொடுங்கள். கீழ்கண்ட வாறு உங்களுக்கு விண்டோ ்தோன்றும்.அவ்வளவுதாங்க. உங்கள் புகைப்படம் முன்றும் ஒன்று சேர்ந்து ஓரே புகைப்படமாக மாறிவிட்டது.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.முக்கியமான குறிப்பு இந்த பதிவு நான் ஒரு இனையப்பக்கத்தில் பார்த்தேன் .  அனைவரும் தெறிந்துக்கொள்வதற்காக இந்த பதிவை வெளியிட்டேன்.


  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Item Reviewed: மூன்று வெவ்வேறு புகைப்படங்களை ஒரே புகைப்படமாக்க Description: Rating: 5 Reviewed By: Unknown
Scroll to Top